Header Ads



இலங்கை வரலாற்றில் வீதி விபத்தில், அதிகமானோர் உயிரிழந்த வருடம்

கடந்த வருடத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2763 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் வீதி விபத்தில் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த வருடம் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 1007 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.