Header Ads



ஞானசாரர் விவகாரத்தில் நல்லாட்சி அரசாங்கம், மௌனம் காப்பது ஏன்..?

புனித அல்குர்ஆனை இலங்கையில் தடைசெய்ய வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞான சாரதேரர் அண்மையில் முன்வைத்த கருத்துக்கு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின்  முகாமைத்துவ சபைக் கூட்டத்தில் ஞானசார தேரரின் மேற்படி கருத்தை வன்மையாகக் கண்டிக்கும் தீர்மானம் ஒன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

சங்கத்தின் முகாமைத்துவ சபைக் கூட்டம் சங்கத்தலைவரும், தொழிற்சங்கவாதியுமான எஸ்.லோகநாதன் தலைமையில், கல்முனை சணச மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரரின் அல்குர்ஆனைத் தடை செய்தல் தொடர்பான கருத்தை வன்மையாகக் கண்டிக்கும் தீர்மானத்திற்கான பிரேரணையை சங்க ஆலோசகர் ஐ.எம்.இப்றாலெவ்வை முன்மொழிந்தார்.  ஆலோசகர் இப்றாலெவ்வை குறித்த கண்டனத்தீர்மானத்திற்கான பிரேரனையை முன்மொழிந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

இந்த நாட்டில் நல்லாட்சி மலர்ந்ததைத் தொடர்ந்து சற்றுமௌனித்திருந்த பொதுபல சேனா சிறுபான்மை மக்கள் மீதான, குறிப்பாக முஸ்லிம்கள் மீதான விசக் கருத்துக்களை மீண்டும் கக்கத் தொடங்கியுள்ளன.

கடந்த மஹிந்த ஆட்சியின் போது தமது இனவாத, மதவாத செயற்பாடுகளை முன்னிறுத்தி கோரத்தாண்டவமாடிய பொது பல சேனாவின் விஷமத்தனங்கள் நல்லாட்சியிலும் தொடர இடமளிக்கப்பட்டிருப்பதுதான் கவலையளிப்பதாகவுள்ளது.

அல்–குர்ஆன்

விஷக்கருத்துக்களையும், முஸ்லிம்களுக்கெதிரான விஷமப் பிரசாரங்களையும் வழமையான பாணியில் முடுக்கிவிட்டுள்ள பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தமது உச்ச வெளிப்பாடாகப் புனித திருக்குர்ஆனை இலங்கையில் தடைசெய்ய வேண்டுமென்ற கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

கடந்த 1400 ஆண்டுகளுக்கு மேலாக உலகில் அமைதி, சமாதானம், சகவாழ்வை வலியுறுத்திக் கொண்டு உலகமக்களுக்கு நேர்வழிகாட்ட இறைவனால் அருளப்பட்ட பெரும் கொடையாக புனித குர்ஆன் மிளிர்கின்றது.

இம்மை, மறுமை

முழுமனித சமூகத்தினதும் இம்மை, மறுமை வாழ்வின் விமோசனத்திற்கும், சுபீட்சத்திற்கும் நேர்வழிகாட்டும் புனித குர்ஆனை இலங்கையில் தடைசெய்ய வேண்டுமெனக் கோருவது இந்நாட்டு முஸ்லிம்களின் மனதில் ஆறாத்துயரை ஏற்படுத்தியுள்ளது. அல்–குர்ஆன் அல்லாஹ்வினால் அருளப்பட்ட அருள் மறையாகும். அது இந்த உலகம் நிலைத்திருக்கும் வரை நிலைத்தேயிருக்கும்.

இலங்கை முஸ்லிம்களை மட்டுமன்றி உலக முஸ்லிம்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் ஞானசார தேரரின் இந்த விஷமக்கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும் பெரும் விசனத்திற்குரியதுமாகும்.

அரசு மௌனம்

இந்த நிலையில் இனவாத, மதவாத செயற்பாடுகளுக்குத் துளியும் இடமளிக்க மாட்டோமென்ற உறுதியைத் தெரிவித்தும், சிறுபான்மை சமூகங்களுக்கு நம்பிக்கையூட்டியும், அவர்களது ஏகோபித்த ஆதரவால் நாட்டில் மலர்ந்த நல்லாட்சி இப்புல்லுருவிகளின் கொட்டங்களை அடக்குவதில் மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வியும் எழத்தொடங்கியுள்ளது.

எனவே இன்றைய நல்லாட்சியில் இனவாத, மதவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் இத்தகைய அமைப்புகள் மீதும், அதன் சூத்திர தாரிகள் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், அத்தகைய செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படவும் வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

கண்டனப் பிரேரணை மீது மேலும் பலரும் உரையாற்றியதுடன் கண்டனத் தீர்மானம் ஏகமனதாகவும் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சங்கப் பொதுச் செயலாளர் எம்.எம்.ஏ.வகாப் தெரிவித்தார்.

9 comments:

  1. மஹிந்தவாவது பிள்ளையை கிள்ளினாலும் இடைக்கிடை தொட்டிலையும் ஆட்டிக்கொண்டிருந்தார்....
    மைத்திரியோ (பிள்ளையை கிள்ளுகிறாரோ இல்லையோ தெரியாது, ஆனால்) இதுவரை தொட்டிலை ஆட்டவேயில்லை!

    மகிந்தவின் ஆட்சியில், முஸ்லிம்களுக்காக குரலெழுப்புவதாக "பம்மாத்து" காட்டிய குள்ளநரி ரணில், தனது ஆட்சியில் அதைவிடவும் மோசமாக நடக்கும்போதும் மௌனமாயிருப்பது (இவர்தான் இப்போது பிள்ளையை கிள்ளுகிறாரோ) என்று எண்ணத்தோன்றுகிறது!

    அதோடு அம்மையாரையும் காணவில்லை, வைத்தியர் ராஜிதவையும் காணவில்லை! எல்லாரும் அரசியல் செய்தார்கள்!
    அவ்வளவுதான்!

    ReplyDelete
  2. They are silent because "Yahapalanaya" is a cheating game.

    ReplyDelete
  3. Kaadiyani and sltj issued the quran for kandy mahanayakr thero.quran not for give non muslims.they are doing unneccasary things.we are making oen problem

    ReplyDelete
  4. இதுவும் ஒரு தந்திரமாக இருக்கலாம். அவர்களை கணக்ெகடுத்து ஊடகங்களில் செய்திகளை வௌியிடுகின்ற போது அவர்கள் சமூகத்தில் அதிகம் கவனத்தில் கொள்ளப்படுவார்கள் ஆனால் அவர்களின் கூற்றை எந்த வித கவணமும் எடுக்காவிட்டால் தமது நடவடிக்ைககளை அவர்களே முடக்கிவிட வழி வகுக்கும்.
    அல் குர்ஆனை பாதுகாக்கும் பொருப்பை அல்லாஹ் எடுத்துள்ளான்.
    அதன் அச்சுப்பிரதியை மாத்திரம் தான் அவர்களால் அழிக்க முடியும் தவிர மனித உள்ளங்களில் இருந்து சிறிதளவேனும் நீக்க முடியாது.
    உலகில் உள்ள அனைத்து பிரதிகளையும் ஒன்றாக அழித்தாழும் அடுத்த ஒரு நிமிடத்தில் அதைவிட 1000 மடங்கு அதிகமான பிரதிகளை எந்தவித மாறுபாடுகளும் இன்றி உருவாக்க முடியும் என்பதே உண்மையாகும். Allah is a great!!
    ya Allah save our country

    ReplyDelete
  5. To Sana Faleel..

    Quran came as a guidance to all people. Do you have proper evidence to support your saying, that QURAN should not be given to NON-Muslims?

    Do learn the religion in its pure form, but not from you grandfather style.

    What right you have to prevent the QURAN ( gauidance of Allah ) reaching to his creation Non-Muslims ?

    People like you prevented the QURAN from reaching the Non-muslims,, this the reason why islam delayed in reaching Srilankan nonmuslims.

    May Allah guide us in correct path

    ReplyDelete
  6. பிரதமரையே வெட்டவெழிச்சமா அன்மையில் இந்த ஞானசார தூற்ரிபேசியிருந்தும் பதில்சொல்லா பிரதம்ர் வேருஎதைதான் கேட்பார்

    ReplyDelete
  7. All are singale people they are the one ruling in Sri Lanka. So we can not believe the president and prime minister they will help only for their society and their clergymen

    ReplyDelete
  8. Totally agree with Fathima Sulha

    ReplyDelete
  9. @ Sana Faleel ! குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று யார் சொன்னது?
    சிங்கலத்தில் சொல்வார்கள் " Balla Piduru Kanneth nehe, Kana Gonaata Dhennath nehe"

    ReplyDelete

Powered by Blogger.