Header Ads



"ஈரான் - சவுதி அரேபிய பதற்றம் அதிகரிக்க அனுமதிக்கப்படுமானால், அனைவருக்குமே இழப்பு"

இரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே ராஜீய உறவுகளில் ஏற்பட்டுள்ள உரசல் மற்றும் மோதல் போக்கை தீர்க்கும் நோக்கில் மத்தியஸ்த்த முயற்சியில் ஈடுபட இராக் முன்வந்துள்ளது.

ஷியா மத குரு ஷேக் நிம்ர்-அல்-நிம்ருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து இரான் சவுதி மோதல் அதிகரித்தது

தமது நாடு இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக உள்ளது என இராக்கிய வெளியுறவு அமைச்சர் இப்ராஹிம் அல் ஜஃபாரி தெரிவித்துள்ளார்.

தெஹ்ரானில் இரானின் வெளியுறவு அமைச்சருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தபோதே இக்கருத்தை அல் ஜஃபாரி வெளியிட்டார்.

சவுதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையே நிலவும் பதற்றம் அதிகரிக்க அனுமதிக்கப்படுமானால் அனைவருக்குமே அதனால் இழப்பு ஏற்படும் என இராக்கிய வெளியுறவு அமைச்சர் கூறுகிறார்.

ஷியா இன முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இராக், இரான் மற்றும் சவுதி அரேபியாவுடன் தமது எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது.

இரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் போக்கு, ஏற்கனவே இனக்குழுக்கள் இடையேயான கடும் மோதல்களால் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் இராக்கின் ஸ்திரத்தன்மையை பாதிக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.

1 comment:

  1. IRAQ is SHIA Majority ? Where is the statistical proof ?

    Saying something repeatedly.. will make the mind of people to consider it as a fact in future.

    So publish with proof.

    ReplyDelete

Powered by Blogger.