என்னை எதிரியாகவே பார்க்கின்றனர் - றிசாத் பதியுதீன்
ஆசிரியர் தொழில் என்பது ஓர் அமாநிதமாகும். ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்ற பழமொழிக்கு அமைவாக, தன்நலம் பாராது இந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, நாம் செய்யும் சேவைகளுக்குரிய நற்கூலியை, இறைவன் நிச்சயம் எமக்குத் தருவான் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
இன்று (23) மதவாச்சி முஸ்லிம்/மகா/வித்தியாலயத்தில் இடம்பெற்ற வட மாகாண பாடசாலை அதிபர்களுடனான, அபிவிருத்தித் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கிடையில், பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் போட்டித்தன்மையை வெல்வதற்கு எம்மிடம் உள்ள வளங்களை ஒன்று சேர்க்க வேண்டும். எமது சமூகத்திலுள்ள கல்விமான்களின் அறிவையும், வர்த்தகர்களின் பண பலத்தையும் ஒன்றிணைத்து, ஆசிரியர்களின் தியாகங்களை அதிகரிப்பதனாலும், நிச்சயம் எமது இலக்கை நாம் அடையமுடியும் என்றார்.
மேலும், ஏனைய சமூகத்தில் இருக்கக்கூடிய அரை வீதமானோர் என்னை எதிரியாகவே பார்க்கின்றனர். வடபுல அகதி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை விளைவித்து, அதனைத் தடுக்கும் விதத்தில் செயற்படுகின்றனர். அவர்களுக்கு அஞ்சி எனது சமூகத்தின் உரிமைகளை நான் விட்டுக்கொடுக்கப் போவதுமில்லை, எனது பணிகளை நிறுத்தப் போவதுமில்லை எனக் கூறிய அமைச்சர், அத்துடன் நாம் நல்ல விடயங்களைச் செய்யும் போது எமக்கு எதிர்ப்புக்கள் அதிகரிக்கும். எதிரிகளின் எண்ணிக்கையும் பெருகும். சவால்களையும், அச்சுறுத்தல்களையும் கண்டு மனம் தளராது, இறைவன் இருக்கின்றான் என்ற நம்பிக்கையுடன் நாம் நமது நற்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், அதிபர்களாகிய நீங்கள், உங்கள் பாடசாலை மாணவர்களுக்கான 100% கல்வியை வழங்குவது எவ்வாறு என்பதை சிந்தியுங்கள் எனவும் வடமாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக ஒரு குழுவை அமைத்து, அங்குள்ள பாடசாலைகளில் காணப்படக்கூடிய குறைபாடுகளையும், தேவைப்பாடுகளையும் கண்டறிந்து, முறையான திட்டமிடல் மூலம் ஒரு செயற்திட்டத்தினை முன்னெடுக்க தாம் எண்ணியுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தியாக மனப்பாங்குடன் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.
இச்சந்திப்பின் போது பாடசாலைகளின் வளப்பற்றாக்குறை, மாணவர்களின் வரவு வீழ்ச்சி, அதிபர், ஆசியர்களின் பொறுப்பு ஆகிய பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
மாந்தை உப்புக் கூட்டுத்தாபனப் பணிப்பாளர் அமீன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் மரைக்கார் மற்றும் முன்னால் வலயக் கல்விப் பணிப்பாளர் சியான் உட்பட பலர் கலந்துகொண்டனர். விசேட பேச்சாளராக கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் Dr.அனீஸ் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்பின் சஹோதரே உண்மைகளை நமது சமூகத்தில் கொண்டு சொல்லும் பொது சில கல்லடி வரத்தான் செய்யும் அதனை பொறு படுத்தாமல் முன்சென்றால் வெத்தி நிச்சயம் நமது முன்னாள் தலைவருக்கு கூட இந்த கோடரி காம்புகள் எத்தனை வசை பாடினார்கள் நீங்கள் அதனை மறக்க வில்லை என்று நினைகின்ரன்
ReplyDeleteகாற்சட்டை உடுக்க தெரியாதவனுக்கு காற்சட்டை உடுத்து அழகு பார்த்தவர் மறைந்த தலைவர் அவரையே அந்த காற்சட்டை காரன் வசை பாடினான் எங்கும் போது இதுவெல்லாம் எம்மாத்திரம்
நாம் எல்லோரும் வயது வித்தியாசம் இல்லாமல் ஆங்கலம் பேசவேண்டும் பொது அறிவு படிக்க வேண்டும் என்று வற்புறுத்தியவர்தான் தலைவர் அஷ்ரப் தாருஸ்ஸலாமில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியது இன்னும் காதில் கேட்கிறது அவரை கொலை செய்தவனை எப்போதும் மனம் மன்னிக்காது.அல்லாஹும்மஹ்பிர்லஹு வர்ஹம்ஹு
ReplyDelete