குழந்தை பிறந்ததும், புற்றுநோயுடனான போராட்டம் முடிவுக்கு வந்தது (படங்கள்)
கனடா- தனது இறக்கும் தருண ஆசையை வைத்தியர்கள் நிறைவேற்றியதால் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த தாய் ஒருவர் புதன்கிழமை மரணமானார்.
பிரியானா ஸ்மாஸ்லெட் என்ற 22 வயது பெண் கிறிஸ்மஸ் தினத்தன்று வன்கூவர் வைத்தியர்களின் முன்கூட்டிய அறுவை சத்திர சிகிச்சை மூலம் தனது குழந்தையை பிரசவித்தார்.
சல்வரோர் என்ற இந்த சிறு குழந்தை பிறக்கும் போது அவனது தாயார் 26 வாரங்களே ஆன கர்ப்பவதி.
ஒரு கிலோகிராமிற்கும் குறைவான எடையுடையவனாக காணப்பட்டான். இந்த அதிசய குழந்தையை தாயாரும் அணைத்து கொண்டார்.
ஸ்மாஸ்லெட் 18வயதாக இருக்கும் போது osteosarcoma எனப்படும் ஒரு வகை எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
இதன்காரணமாக தான் திருமணம் செய்து கொள்ளவோ அல்லது குழந்தை ஒன்றிற்கு தாயாகவோ முடியும் என அவர் எதிர்பார்க்கவில்லை.
இச்சமயத்தில் அடம் ஸ்மாஸ்லெட் என்பவர் இவரது வாழக்கையில் வந்து கடந்த கோடைகாலத்தில் இவர் கர்ப்பமானார். செப்ரம்பரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அடுத்த மாதமே அடம் இறந்து விட்டார். இவரது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை.
ஸ்மாஸ்லெட் குழந்தை பிறக்கும் வரை தான் உயிருடன் இருக்க வேண்டும் என விரும்பியதாக செய்தியாளரிடம் தெரிவித்திருந்தார். டிசம்பர் மாதம் 30ந்திகதி இந்த தாய் புற்றுநோயுடனான தனது போராட்டத்தை முடித்து கொண்டார்.

Post a Comment