முஸ்லிம்களை விமர்சித்த டிரம்பிற்கு, தடை விதிப்பது குறித்து பிரிட்டன் பாராளுமன்றில் விவாதம்
முஸ்லிம்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமெரிக்க குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை பிரட்டனில் தடைசெய்யக் கோரும் மனு மீது அந்நாட்டு பாராளுமன்றத்தில்= விவாதம் இடம்்பெற்றது.
எனினும் அவரது கருத்து முட்டாள்தனமானது என்றும் மனதை புன்படுத்துவது என்றும் பெரும்பாலான எம்.பிக்கள் கருத்து வெளியிட்டிருந்த போதும் அவருக்கு தடைவிதிப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்ற நலைப்பாடு வலுவாக இருந்தது. டிரம்ப் தனது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டுவந்தால் அவருக்கு பிரிட்டனுக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அவ்வாறானதொரு தடை அவருக்கு மேலும் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் அல்லது அமெரிக்க விவகாரத்தில் பிரிட்டன் தலையிடக் கூடாது என்றும் கருத்து வெளியிட்டிருந்தனர்.
முஸ்லிம்கள் அமெரிக்கா வருவதை தடை செய்ய வேண்டும் என்ற டிரம்பின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த கருத்துக்கு எதிராக பிரிட்டனின் அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கைச்சாத்திட்ட மனுவில் அவர் பிரிட்டனுக்கு வருவது தடை செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மூன்று மணி நேர விவாதத்தில் அனைத்து தரப்பினரும் டிரம்பின் கருத்தை விமர்சித்தனர். எனினும் அது குறித்து எந்த வாக்கெடுப்பும் இடம்பெறவில்லை.
Post a Comment