வெளிநாடு வாழ் இலங்கையர்கள், மைத்திரியை எப்படி தொடர் கொள்வது..? (விபரம் இணைப்பு)
நாட்டின் அனைத்து பிரஜைகளும் ஜனாதிபதியை தொடர்புகொண்டு தமது தகவல்களை தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட 'ஜனாதிபதி ஹதபிம' தேசிய செயற்திட்டம் நாளை 08-01-2016 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தினூடாக பொது மக்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு, ஈமெயில் மற்றும் கடிதம் மூலமாகவும் ஜனாதிபதிக்கு நேரடியாக தெரிவிக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு, ஆரம்பிக்கப்படும் இத்தேசிய செயற்திட்டத்தினூடாக இடைத்தரகர்களின்றி, ஜனாதிபதியிடம் பொதுமக்கள் தங்கள் அரச தலைவரிடம் மக்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்பளிக்கப்படவுள்ளது.
இதனை இலகுவாக நடைமுறைப்படுத்தும் வகையில் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் பொதுமக்கள் ஒருங்கிணைப்பு பிரிவொன்று உருவாக்கப்படவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் நாளை தொடக்கம் கொழும்பு ஜனாதிபதி மாளிகை மக்கள் பார்வைக்காக திறந்து விடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியிடம் தெரிவிக்க இங்கே கிளிக் செய்க
Very good.every one tell whats ever need for our country.dont say for our own
ReplyDelete