"வீண்விரயம் தவிர்ப்போம், இறை அன்பை பெறுவோம்"
-அபூ உமர்-
சிலரை வறுமை பிழிந்து வாட்டியெடுக்க,இன்னும் பலர் தமக்கு இருக்கின்றதை எதில் செலவு செய்வது என திண்டாடுகின்றனர்.அதிகம் இருக்கின்றவர்கள் இல்லாதோருக்கும்,குறைந்தோருக்கும் கொடுப்பது மனிதநேயமும்,நியதியுமாகும்.இது இவ்வாறு இருக்கு வீண்விரயம் செய்வதானது பிறரின் சாபத்துக்கும் இறைவனின் தண்டணைக்கும் இட்டுச்செல்லும் இழிச்செயல் .ஒருவர் இருப்பதை தனக்கு தேவையானதை விரயமின்றி செலவிடவேண்டும். மிஞ்சியதை பிறருக்கு விட்டுவிட வேண்டும். இதன் போது அவர் பிறரின் அன்புக்கும் அல்லாஹவின் அருளுக்கும் ஆளாகின்றார்.
வீண்விரயம் என்பது இன்று சாதாரண ஒன்றாக காணப்படுகின்றது. இதனால் உலகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது.செலவம் படைத்தவர்கள் தமக்கு அதிகமான தேவைகள் இருக்கின்றன என அவர்கள் தமது செலவத்தை வீண்விரயம் செய்கின்றனர்.இதனால் ஏழைகள்,வறியோருக்கு போக வேண்டிய பங்குகள் குப்பைகளுக்கு செல்கின்றன.இது இரு பிரிவினருக்கும் மத்தியில் போட்டி பொறாமை என்பன வெடித்து அதன் மூலம் பல பாதக விளைவுகள் தோன்ற வழிவகுக்குகின்றன. வீண்விரயத்துக்கு ஆட்பட்ட பின் துன்பத்தை ஈடு கொடுக்க முடியாத பலவீனம் ஏற்படுகின்றது.ஆகவே சாதாரன வறுமை ஏற்பட்டவுடன் அதை சீர்செய்ய நெறிகெட்டுவிடவும்,திருட்டு, கொள்ளை,களவு போன்ற விடயங்களை மேற்கொள்ளவும் துணிகின்றனர்.வளர்ந்த நாடுகளில் அதிக குற்றங்களுக்கு பின்னனியாக இதையும் குறிப்பிடலாம்.
வீணவிரயம் அதிகரிக்கும் போது புவியின் சமநிலை கூட பாதிப்படைகின்றது. தமது தேவை அதிகரிக்கும் போது அதை எவ்வாறேனும் அடைய துணிகின்ற மனிதன் தனது தேவை பூர்த்தியாகி விட்டால் போதும் எனும் குறுகிய மனப்பாங்குடன் செயற்படுகின்றான். இதனால் ஏற்படும் பின்விளைவுகளை சிந்திப்பதில்லை.பேராசை மிகுதியால் பல நாடுகள் அழிக்கப்பட்டன. சூரையாடப்பட்டன. அனைத்திலும் கலப்படம்,எதிலும் அதிக லாபம்,தனது தேவையே முதலிடம் எனும் குறுகிய மனப்பாங்கு போன்றன அதிகரித்துவிட்டன. இதன் விளைவுகளை அதிகம் காணமுடிகின்றது.
மனிதன் தனது தேவைக்கு போதுமானதை மாத்திரம் பயன்படுத்தும் நிலை தோன்றும் போது பல உயிர்கள் பாதுகாக்கப்படும்.புவியின் வளங்கள் அனைவருக்கும் போதுமானதாக இருக்கும்.பல நாடுகள் தமக்கு அதிகரித்த வளங்களை தம் கைவசப்படுத்தி அவற்றை பிடித்து வைத்துள்ளன. உரியவர்களுக்கு சென்றடையவிடாது.இதன் விளைவு பல உயிர்கள் செத்துமடிகின்றன.இன்னும் பல ஏங்கித்தவிக்கின்றன.
இஸ்லாம் வீண்விரயத்தை தடு்த்துள்ளது.இவ்வாறு செயவோர் இழிவானவர்கள் என சுட்டிக்காட்டுகின்றது.இருந்த போதிலும் ஒரு கவலை என்னவெனில் இந்த வீண்விரயத்தை செய்யும் பல நாடுகள் முஸ்லிம் நாடுகளாக இருப்பது.அல்லாஹ் கூறும் போது “ அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை (வீணாக) செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்” (அல்குர்ஆன் 4:36).மேலும் “வீண் விரையம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்”.(அல்குர்ஆன் 6:141)இன்னும் “உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை”. (அல்குர்ஆன்7:31) வீணவிரயத்தை தவிரக்க இஸ்லாமிய போதனைகள் சில நபிமுஹம்மத் (ஸல்) அவர்கள் கூறும் போது.''உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம்" என்று நபி (ஸல்)அவர்கள் அறிவுருத்தினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்கள்: முஸ்லிம், அஹமத், அபூதாவூத், திர்மிதி) தவறி விழுந்தால் கூட இப்படியெனில் கொட்டுவதே தவறு என தெரிந்து செய்யும் போது எவ்வளவு கொடியது.
செலவம் எனபது ஒரு சோதனை அதை பரீட்சிப்பதற்காக தந்துள்ளான் ஆகவே அதை நல்ல முறையில் பயன் படுத்துவது கட்டாய கடமை.நபிகளார் குறிப்பிடும் போது ''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனையுண்டு. என்னுடைய சமுதாயத்திற்கு செல்வம் சோதனையாகும்'' அறிவிப்பவர்: கஅப் பின் இயாஸ் (ரலி) (நூல்கள்: திர்மிதீ 2258, அஹ்மத் 16824).தனக்கு முஞ்சியதை பிறருக்கு அளிப்பது இதை நபிகளார் ஸல் அவர்கள் கூறும் போது "தனது அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் முஃமினாக (இறை விசுவாசியாக) மாட்டார்.' 'இனறு பல கோடி பேர் பசியால் மடிய சில இலட்சம் பேர் உணவை கடலிலும் குப்பைகளிலும் கொட்டுகின்ற நிலை இது எப்போது மாறும் என உள்ளங்கள் ஏவித்தவிக்கின்றன.இதற்கான பதிலை காலம் சொல்லட்டும்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை (வீணாக) செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன் (அல்குர்ஆன் 4:38)
ReplyDeletequran verse change not 36 its 38