'சிங்க லே அபி' தேசிய வேலைத்திட்டமாக வளர்ச்சி - ஞானரதன தேரர்
(Vi)
அமைப்பு எந்தவொரு அரசியல் நோக்கம்கொண்டதாகவோ அல்லது இனவாதக் குழுவாகவோ செயற்படும் அமைப்பு அல்ல என ஜம்புரேவெல ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.
அத்தனகடவெல ஜம்புரேவெல ஸ்ரீ மகிந்தாராம விகாரையில் நடைபெற்ற அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாம் 'சிங்கலே அபி' அமைப்பினூடாக இந்த சமூக சேவை திட்டதை ஆரம்பிப்பதன் பின்னணி எந்தவொரு அரசியல் மற்றும் இனவாத செயற்பாடுகளுக்கும் அப்பாலாகும். 'சிங்கலே அபி' அமைப்பு இரு பிரதான நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
முதலாவது எமது அமைப்பில் அங்கம் வகிக்கும் எவருக்கும் அரசியல் நோக்கம் இருக்க முடியாது.
அமைப்புக்குள் தனிப்பட்ட அரசியல் நோக்கங்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை உட்புகுத்த முடியாது.
அடுத்தது சிலர் அமைப்புகளை உருவாக்கி அதனூடாக அவர்கள் பிரபல்யம் தேட முனைகின்றனர்.எனினும் எமது அமைப்பினூடாக பிரபல்யம் தேட முனைபவர்களின் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது.
மேலும் 'சிங்கலே அபி' சிந்தனையை சமூகமயப்படுத்துவதற்கு நாம் பணம் செலவிடவில்லை. எனினும் அது இன்று தேசிய ரீதியிலான வேலைத்திட்டமாக வளர்ச்சியடைந்துள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தில் நாம் எந்தவொரு அரசியல்வாதிகளையும் இனவாதிகளையும் தொடர்பு படுத்தாமல் பௌத்தர்களின் மேம்பாட்டினை மாத்திரம் அடிப்படையாகக்கொண்டு கட்டியெழுப்பியுள்ளோம்.
ஆகவே தேசிய ஒருமைப்பாட்டை விரும்புகின்ற அனைவரையும் இணைக்கின்ற உறுதியான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது.
எமது அமைப்பு எந்தவொரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கு எதிரானதல்ல என்பதனைத் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்.
மேலும் நாம் எந்தவொரு அரசியல் கட்சியினது கையாட்களும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment