Header Ads



பைசால் காசீமுடைய, பெயரில் ஏமாறாதீர்கள்...!

-மு.இ.உமர் அலி-

சுகாதார அமைச்சர், பிரதி அமைச்சரின் இணைப்பாளர்கள் என்று கூறிக்கொள்ளும்  சில பேர்வழிகள் சுகாதாரத்துறையில் தொழில் பெற்றுத்தருகின்றோம், கல்வித்துறையில் உள்ள சிற்றூளியர்களுக்கு பதவி உயர்வு பெற்றுத்தருகின்றோம்  எனும் பசப்பு வார்த்தைகளை பேசி  மக்களை ஏமாற்றி பெருந்தொகையான பணத்தினை பெற்று வருகின்றனர்.

இது விடையமாக  சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம்  கருத்துத் தெரிவிக்கையில்,வடக்கு கிழக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை  சம்மந்தமான பிரச்சனைகளை  கவனித்து  தேவையான நடவடிக்கைகளை  எடுக்குமாறு சுகாதார அமைச்சர் அவர்கள் என்னை பணித்துள்ளார்.

கடந்த வாரம் பொத்துவிலில் நடைபெற்ற ஒரு வைபவத்தில் அதனை பகிரங்கமாகவும் தெரிவித்தார்.மேலும் சுகாதாரத்துறை சம்மந்தமான இப்பிரதேசங்களின்  தேவைகளை  பிரதி அமைச்சர் அவர்களை அணுகியே  பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

எமது அமைச்சினூடாக  வழங்கப்பட உள்ள நியமனங்கள் பிரதேச ரீதியான  கட்சிப்பிரமுகர்களிநூடாக  மட்டுமே  நடைபெறும்,தொழில் வழங்கும் விடையத்தில்  எந்த முகவர்களும் ஈடுபடுத்தப்படவும் இல்லை,அவ்வாறு ஈடுபடுத்தப்படவும்  மாட்டார்கள்,

கிராமப்புறங்களில் உள்ள இளம் தமிழ்முஸ்லீம் யுவதிகள்  இந்த ஏமாற்றுப்பேர்வளிகளிடம் பெருந்தொகையான பணங்களை வழங்கியிருப்பதாக முறைப்பாடுகள்  கிடைத்துள்ளன.

எனவே தமிழ் முஸ்லீம் மக்களை  இவ்விடையத்தில் குறிப்பாக  கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். எனக்கூறினார்.

No comments

Powered by Blogger.