Header Ads



கொடூர சமய சட்டங்களை செயற்படுத்தும், நாட்டில் வாழ்ந்த ஹுசேனை எதிர்க்க ஒன்றிணையுங்கள்



நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஒன்றிணைய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (28) வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு அழைப்பு விஜடுத்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரான செய்ட் அல் ஹுசேன் யுத்த குற்றங்களை விசாரணை செய்யவே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

தேசிய ஐக்கியத்தை சீர்குலைத்து இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கவே தேசிய அரசாங்கம் முயற்சிக்கின்றது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்தவராவார். உலகளவில் மனித உரிமைகள் மீறப்படுவதும் கொடூர சமய சட்டதிட்டங்களை செயற்படுத்தும் நாட்டில் வாழ்ந்தவர்.

எமது நாட்டில் மனித உரிமை தொடர்பில் ஆராய முடியும் என்பது வேடிக்கையான விடயமாகும்.

மேலும் மக்களை ஏமாற்றி, நாட்டிற்காக உயிர்நீத்த இராணுவ வீரர்களை காட்டிக்கொடுத்து அவர்களை தண்டிக்கவே தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் முயல்கின்றது.

எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

7 comments:

  1. He is the extremist. He does not know about diplomatic politics. He can only give voice like a dog. Our country is facing many pressure because of him.

    ReplyDelete
  2. கச போக்கரி நாயே உன்னைப்போல் துவேசம் பிடித்த நாட்டில் வாழவில்லை அவர்.அடக்கி வாசி இந்த நாட்டில் நீதான் ஒண்ணா நம்ம்பர் இனத்துவேசம் பிடித்த நாய் உன்னைப்போன்ற நைகலால்தால் இன்று வரை நாடு முநேராமல் இருக்கிறது .

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னிங்க

      Delete
  3. Antha ella naadugalaum vida Sri Lanka vil thaanda athiga manitha urimai meeralgal....Ean un vaaththiyam muzammil sollavillayo....illa muzammil matham maari vittano....
    Athuvum unnaipola aatgal irunthaal intha naadu seekrame alinthu vidumda muttaaal...

    ReplyDelete
  4. இவரது வார்த்தை பிரயோகம் ( மத்திய கிழக்கு நாடு... உலகிலேயே கொடூர சமய சட்ட திட்டங்களை செயற்படுத்தும்...) பெரும் பான்மை மக்களுக்கு ஒரு பிழையான செய்தியை சொல்ல முயட்சிகிறார். முஸ்லிம் தலைவர்கள் என்று கூருபவர்கலும், அரசியல் வாதிகளும் பொது அமைப்புக்களும், தனி நபர்களும் முடிந்த வரை இதை கண்டிக்க வேண்டும் என்பது எமது தாழ்மையான அபிப்பிராயமாகும்.

    ReplyDelete
  5. இவரது வார்த்தை பிரயோகம் ( மத்திய கிழக்கு நாடு... உலகிலேயே கொடூர சமய சட்ட திட்டங்களை செயற்படுத்தும்...) பெரும் பான்மை மக்களுக்கு ஒரு பிழையான செய்தியை சொல்ல முயட்சிகிறார். முஸ்லிம் தலைவர்கள் என்று கூருபவர்கலும், அரசியல் வாதிகளும் பொது அமைப்புக்களும், தனி நபர்களும் முடிந்த வரை இதை கண்டிக்க வேண்டும் என்பது எமது தாழ்மையான அபிப்பிராயமாகும்.

    ReplyDelete
  6. இப்போது கூட சவுதி இளவரசர் நாட்டில்தான் உள்ளார்கள் எத்தனை பேர் அவரிடம் உதவி வேண்டி நிற்பார்கள் என்பதை இந்த நாய் அறியவில்லையா?

    ReplyDelete

Powered by Blogger.