"மாடறுப்பு விவகாரம்" முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்திக்கிறார்கள்
நாட்டில் மாடு அறுப்பதை தடைசெய்து வெளிநாடுகளிலிருந்து இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்தினால் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கவுள்ள மத கடமைகளுக்கான சவால்கள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தயாராகுமாறு முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பயாகலை இந்துக்கல்லூரியில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவின் போது ஜனாதிபதி நாட்டில் மாடறுப்பினை இல்லாமற் செய்து நுகர்வுக்கு தேவையான இறைச்சியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் கருத்தினையடுத்து முஸ்லிம்கள் அதிர்ச்சிக்குள்ளாகி, என்னை முஸ்லிம் விவகார அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி சுமுகமான தீர்வொன்றினைப் பெறுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள் என்று அமைச்சர் ஹலீம் ‘Viக்குத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
‘மாடறுப்பது தடை செய்யப்படுமென்றால் அது முஸ்லிம்களின் சமயக்கடமைகளுக்கு பாதகமாக அமையும். எனவே இதுபற்றி ஜனாதிபதியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும். அதற்காக அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும்.
ஒரு அணியாக ஜனாதிபதியைச் சந்திப்பதன் மூலமே ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஜனாதிபதி மீது முஸ்லிம்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை அவர் அறிவார். அவர் மீது நம்பிக்கை வைத்தே முன்னாள் ஜனாதிபதியின் தோல்விக்கு முஸ்லிம்கள் முழுப்பங்களிப்பினை வழங்கினார்கள்.
தமது பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படும் என்பதில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் உறுதியாக இருக்கிறார்கள். எனவே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஜனாதிபதியைச் சந்திப்பதன் மூலமே எமக்கு சாதகமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி
தேசிய ஒருமைப்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸியும் மாடு அறுப்பது தடைசெய்யப்பட்டால் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தான் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடுவதன் மூலம் சாதகமான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
‘மாடறுப்பது தடை செய்யப்படுமென்றால் அது முஸ்லிம்களின் சமயக்கடமைகளுக்கு பாதகமாக அமையும்.
ReplyDeleteமாடறுப்பது முஸ்லீம்ளுக்கு எப்போது
கடமையாக்கப்பட்டது?
முஸ்லிம் விவகார அமைச்சரே விவகாரம் ஆக்கலாமா?
This is an issue for cattle farmers.
ReplyDeleteNo this is an issue oi cattles only
Deleteஇது மாட்டின் மீது அன்பில்லை முஸ்லீம்களின் பாதிக்க படனும் அருப்பில் அல்லாஹ்வின் பெயர் விற்ப்பது முஸ்லீம் முஸ்லீம்களின் குர்பான்
ReplyDeleteWhy we put our norse on this matter..let them do it.see what happend...let a lot of cows increase...let them export cows to slaughter in India or Maldives..
ReplyDelete