திருகோணமலையில் கணிதப் பிரிவில், முகமட் ஷாம் முதலிடம்
-ரபாய்டீன்பாபு ஏ .லத்தீப் -
க.பொ.த (உ/த) ப் பரீட்சைப் பெறுபேற்றில் திருகோணமலை தி/சாஹிரா கல்லூரி கணிதப் பிரிவில் 3ஏ சித்தி பெற்று மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது.
சமீம் முகமட் ஷாம் என்ற மாணவனே மேற்படி பெறுபேற்றை பெற்று சாதனை படைத்தவராவர். திருகோணமலை நகர்ப்புறத்தில் போதியளவில் பௌதீக வளத்தை பெற்றிராத மேற்படி பாடசாலை பல தேசியப் பாடசாலைகளுக்கு மத்தியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. விஞ்ஞானப் பிரிவில் சண்முகா இந்து மகளிர் கல்லூரி 3ஏ சித்தி பெற்று மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற நிலையில் கணிதப் பிரிவில் சாஹிராக் கல்லூரி மேற்படி இடத்தை பெற்றுள்ளது.
குறிப்பிட்ட சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட விஞ்ஞான கணிதப் பிரிவானது இன்று அதிகளவிலான வைத்தியர்களையும், பொறியியலாளர்களையும் உருவாக்கியுள்ளது. கடந்த வருடம் விஞ்ஞானப் பிரிவில் தேசிய மட்டத்தில் 72 இடத்தை பெற்று சுப்பர் மெரிட் என்ற இடத்தையும் தக்க வைத்துக்கொண்ட பெருமையும் மேற்படி கல்லூரிக் குரியதே.
ஆயினும் ஆரம்பப் பிரிவில் கட்டிட வசதி பற்றாக் குறைவினால் மிகவும் நெருக்கடிக்குள்ளான நிலையில் தற்காலிக கொட்டிலில் வகுப்பறையை வைத்து மாணவர்களுக்கு கற்பித்தல் நடாத்தும் நகர்ப்புறத்தில் உள்ள ஒரேயொரு பாடசாலை இது என்பது மிகவும் வருந்தத் தக்க விடயமாகும். எனவே சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளை பெற்றுத் தரும் மேற்படி பாடசாலைக்கு கட்டிட வசதிகளை திணைக்களம் செய்து தரல் வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்கின்றனர்.
Best wishes
ReplyDeletewish you and your school the best in future.
ReplyDelete