Header Ads



மதிய உணவு நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் தொழுகையில் ஈடுபடுபவர்கள் பணி நீக்கப்படுவர்

அமெரிக்காவில் உள்ள நிறுவனம் ஒன்றில் மதிய உணவு நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் தொழுகையில் ஈடுபடும் இஸ்லாமிய ஊழியர்கள் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு இஸ்லாமியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள Wisconsin மாகாணத்தில் Ariens என்ற மின் உற்பத்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களின் 53 இஸ்லாமிய ஊழியர்களும் அடங்குவர்.

மேலும், கடந்த வியாழக்கிழமை வரை இஸ்லாமிய ஊழியர்கள் தொழுகையில் ஈடுபட நாள்தோறும் அவர்களின் விருப்பப்படி 5 நிமிடங்கள் வீதம் இரண்டு முறை தொழுகைக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

ஆனால், வியாழக்கிழமை அன்று நிறுவனம் ஒரு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

அதாவது, இஸ்லாமிய ஊழியர்கள் தங்களுடைய மதிய உணவு நேரத்தில் மட்டுமே தொழுகையில் ஈடுப்பட வேண்டும்.

இதை தவிர்த்து மத்தியில் இடைவெளி (Break) எடுத்துக்கொண்டு தொழுகையில் ஈடுபட்டால், அவர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 53 இஸ்லாமிய ஊழியர்களுக்கும் பணி பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய இஸ்லாமிய ஊழியர் ஒருவர், ‘அமெரிக்காவில் நான் 35 வருடங்களாக வசித்து வருகின்றேன். ஆனால், தொழுகை நேரத்தை அதிகாரிகளே நிர்ணயம் செய்து ஊழியர்களுக்கு அறிவுறுத்தும் ஒரு நிறுவனத்தை இப்போது தான் பார்க்கிறேன்.

நிறுவனம் அறிவுறுத்துவது போல் மதிய உணவு நேரத்தில் தொழுகையில் ஈடுப்பட முடியாது. ஏனெனில், அது இஸ்லாமியர்களின் பழக்கமும் இல்லை’ என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

எனினும், மின் உற்பத்தி நிறுவனத்தின் இந்த அதிரடி மாற்றத்தை சகித்துக்கொண்டு 10 இஸ்லாமியர்கள் பணியை தொடர உள்ளதாகவும், எஞ்சிய 43 ஊழியர்களின் பணி பறிப்போகும் அபாயத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

4 comments:

  1. I believe the Muslim brothers take this challenge in their stride with the help of Allah. May Almighty Allah fortify them in Islam and provide them better opportunities!

    ReplyDelete
  2. கவலை வேண்டாம் நண்பர்களே!

    எல்லாம் அறிந்தவன் இறைவனாக இருக்கும்போது அலுவலகத்தினரின் நிர்ப்பந்தமும் அவனறிவானல்லவா..?

    ஆகவே மார்க்கக் கடமை தாமதித்து நிறைவேற்றப்படுவதை அவன் (ஊழியர்கள் மன்றாடிக் கேட்காமலே) புரிந்துகொள்வான்.

    ReplyDelete
  3. தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவே உள்ளது.
    Once an old blind Sahabi asked Prophet (S.A.W) " My house is far from the mosque and I don't have anybody to take me to the mosque. So can I pray the Fajr in my home itself?"
    Prophet replied " Yes you can"
    Whilst the Sahabi was returning Prophet (S.A.W) called Him and asked " can you hear the azaan ( call for prayer ) from your house? "
    This old man replied " Yes " .
    So the prophet (S.A.W) said " you must perform the prayer at mosque "

    Risk comes from Allah. If they are not allowed to pray they can leave and find a better job. It depends on your taqwa ( Iman)
    I remember a story of one of my friend one day after jummah he refused to go to his work (tesco)because they had alchohol. The next Monday morning he received a letter from an employer which he applied 8 weeks ago,with a better wage and better position. Ma sha Allah he is not the same person we used to see during school days or before the that decision he took. Now married with kids living happily. So it's all about our Iman.
    If we know that the rizks comes from Allah we have to find a halal way to make money. Allah will make it more easier and put baraqah in our earnings In sha Allah.

    ReplyDelete
  4. Enter your comment...prayar is pillar of islam. So all muslims don't adjustment in prayer.

    ReplyDelete

Powered by Blogger.