Header Ads



நான் வாய் திறந்தால், இன­வா­தி­யென சொல்வார்கள் - ஹக்கீம்

-ARA.Fareel-

சில குழுக்கள் நாட்டு மக்­க­ளி­டையே அச்ச நிலையை உரு­வாக்கி அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ள முயற்­சிக்­கின்­றன. ‘சிங்ஹ லே’ என்ற ஸ்டிக்கர் விவ­கா­ரத்தை இவ்­வாறே பார்க்க வேண்­டி­யுள்­ளது. ஆனால் அவ்­வா­றான முயற்­சி­க­ளுக்கு அர­சாங்கம் ஒரு போதும் இட­ம­ளிக்­காது என நகர திட்­ட­மிடல் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மை­யகம் தாருஸ்­ஸ­லாமில் நேற்­றுக்­காலை நடை­பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் நிறு­வி­யுள்ள புதிய தொழிற்­சங்­க­மான தேசிய ஐக்­கிய ஊழியர் தொழிற்­சங்­கத்தை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

தேசிய ஐக்­கிய ஊழியர் தொழிற்­சங்­கத்தின் தலை­வ­ராக பத­வி­யேற்­றுள்ள அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது;

‘சிங்ஹ லே’ போன்ற ஸ்டிக்கர் குழுக்­க­ளினால் நாம் பீதிக்­குள்­ளாக வேண்­டி­ய­தில்லை. நாட்டில் இன­வா­தத்தை உரு­வாக்க முயற்­சித்த குழுக்­க­ளுக்கும் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கும் கடந்த காலங்­களில் என்ன நடந்­தது என்­பது அவை­ருக்கும் தெரியும். அப்­ப­டி­யா­ன­வர்கள் மீண்டும் இன­வா­தத்தின் மூலம்  ஆட்­சியைக் கைப்­பற்றிக் கொள்­ளலாம் என்று நினைப்­ப­தென்றால் அது தவ­றாகும்.

தற்­போது ‘சிங்ஹ லே’ ஸ்டிக்­கர்­க­ளினால் தேவை­யற்ற பீதியை உரு­வாக்கி வரு­கி­றார்கள். இது தொடர்­பாக இன்­று­வரை நான் வாய் திறக்­க­வில்லை. வாய் திறந்­தி­ருந்தால் என்னை இன­வா­தி­யென்றும் நான் இன­வா­தத்தைப் பரப்­பு­வ­தா­கவும் தவ­றான கருத்­து­களைப் பரப்­பு­வார்கள்.

இத­னா­லேயே வாய் திறக்­க­வில்லை. ‘சிங்ஹ லே’ என்ற ஸ்டிக்­க­ருக்குப் பதி­ல­ளிக்கும் முக­மாக ‘அபித் சிங்ஹ லே’ (நாங்­களும் சிங்ஹ லே) என்ற ஸ்டிக்­கரை வெளி­யி­டலாம் என்றும் எண்­ணி­யி­ருந்தேன். ஸ்டிக்­கரை பச்சை நிறத்தில் வெளி­யிட தீர்­மா­னித்­தி­ருந்தேன். 

எல்­லோ­ரது இரத்­தமும் ஒரே நிற­மாகும். அர­சியல் இலா­பங்­க­ளுக்­காக எமது இரத்தம் சிவப்பு எமது இரத்தம் பச்சை என்று ஸ்டிக்கர் வெளி­யி­டு­வது தவ­றா­ன­தாகும். இது அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான முயற்­சி­யாகும்.

கிறிஸ் மனிதன் கடந்த அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தில் கிறீஸ் மனிதன் (கிறீஸ் யகா)  சம்­ப­வங்கள் மக்­களை பெரும் பீதிக்­குள்­ளாக்­கின. இந்த சம்­ப­வங்கள் ஏன் நடந்­தன என்று இது­வரை கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. இதற்­கான காரணம் அறி­யப்­ப­ட­வில்லை.

தேசிய ஐக்­கிய ஊழியர் தொழிற்­சங்கம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபித்­துள்ள தேசிய ஐக்­கிய ஊழியர் தொழிற்­சங்கம் மறைந்த எமது தலைவர் அஷ்­ரபின் கன­வாகும். தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தேவை 1999 லிருந்து பேசப்­பட்டு வந்­தது. இன்று அது ஒரு தொழிற்­சங்­க­மாக நிறை­வே­றி­யுள்­ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை ஒரு இன­வாதக் கட்சி என்றே கூறு­கி­றார்கள். இதி­லி­ருந்தும் பிறழ்வுற்ற முஸ்லிம் காங்­கிரஸ் இன­வாதக் கட்­சி­யல்ல என்­பதை நிரூ­பிப்­ப­தற்­கா­க­வுமே இந்த புதிய தொழிற்­சங்கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. சாதி, சமய, மொழி பேதங்­க­ளற்ற ஒரு புதிய அர­சியல் கலா­சாரம் இந்த தொழிற்­சங்கம் மூலம் உரு­வாக்­கப்­படும்.


3 comments:

  1. இப்படித்தான் மற்றைய ஆட்சியில் இருக்கும் போதும் " அரசாங்கம் ஒரு போதும் இனவாத்த்திறிகு இடமளிக்காது" என்று கூரினீர்கள்.
    நீங்கள் நீதியமைச்சராக இருக்கும் போதே ஒரு ..... ஐயும் பிடுங்க முடுயவில்லை.
    முஸ்லிம் காங்கிரஸ் என்று ஒன்று உருவாகியதன் பின்தான் பல சிங்கள இனவாத கட்சிகளும் ஆர்ம்பிக்கப்பட்டன. முஸலிம்களின் உரிமைகளை நாங்கள் பாதுகாப்போம் என்று பாசாங்கு செய்து கடைசியில் உங்கள் Political Seat ஐ தான் பாதுகாத்துக்கொள்கின்றீர்கள்.
    மத்திய மேல்மாகாணங்களைகப் பொருத்த மட்டில் சிங்கள அரசியல்வாதிகளே அஅதிகம் முஸ்லிம்களுக்கு உதவி செய்துள்ளார்கள். இன்னும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
    முஸ்லிம்களுக்கு உதவ முஸ்லிம் காங்கிரஸில் இருந்து செய்வதைவிடவும் வேறொரு கட்சியில் இருந்து செய்வதே மிகவும் இலேசாக இருக்கும் மற்றது பேரினவாதிகள் அதிகம் எதிர்ப்பு காட்டமாட்டார்கள்.

    ReplyDelete
  2. Voice srilanka சகோதரரே உங்களின் பின்னூட்டங்களில் வரும் கருத்துகள் அழகாகவும் ஆழமாகவும் இருப்பதால் எல்லோரும் விரும்பி பார்ப்பதை அவதானிக்ககூடியதாக உள்ளது ஆகவே சொற்கள் தடம்பிரளாமல் பார்த்துக்கொண்டுள்ளுங்கள் உ+ம் (..... ஐயும் புடுங்கவில்லை.மன்னிக்கவும்

    ReplyDelete
  3. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete

Powered by Blogger.