"மகாசங்கத்தினரின் எதிர்ப்புக்குள்ளாகும், எந்தவொரு விடயத்திலும் அரசாங்கம் கைவைக்காது"
ஆயிரக்கணக்கான வருடங்கள் எமது கீர்த்திமிகு வரலாறு நெடுகிலும் சிறந்த அரசாட்சிக்கு வழிகாட்டிய மகாசங்கத்தினரின் எதிர்ப்புக்குள்ளாகும் எந்தவொரு விடயத்திலும் அரசாங்கம் கைவைக்காது என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
கடும் வாதப்பிரதிவாதங்களுக்குள்ளான பிக்குகள் தொடர்பான சட்டமூலம் மட்டுமன்றி அரசாங்கத்தின் ஏனைய நடவடிக்கைகளிலும் மகாசங்கத்தினரின் எதிர்ப்புகள் உருவாகும் பட்சத்தில் அதற்கு செவிசாய்க்க அரசாங்கம் எப்போதும் தயாராகவுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நேற்று (21) பிற்பகல் பத்தேகம திலக்க உதாகம ஸ்ரீ பிரேமரத்ன பௌத்த மத்திய நிலையத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தூபியை திரைநீக்கம் செய்துவைக்கும் புண்ணிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
புத்தசாசன சேவைகளைப் பலப்படுத்துவதில் பிரிவெனாக் கல்வியைக் கட்டியெழுப்புவது அத்தியாவசியமானதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதிஇ பிரிவெனாக் கல்வியில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதனை கட்டியெழுப்புவதற்கு அரசாங்க கொள்கைக்கேற்ப அர்ப்பணத்தோடு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இன்று பிற்பகல் பத்தேகம திலக உதாகம ஸ்ரீ பிரேமரத்ன பௌத்த மத்திய நிலையத்திற்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள்இ முதலில் சமய அனுஷ்டானங்களில் கலந்துகொண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் ஸ்ரீ பிரேமரத்ன பௌத்த மத்திய நிலையத்தின் தலைவர் உனன்விடியே பிரேமரத்ன தேரர் அவர்களைச் சந்தித்து அவரது சுகதுக்கங்களைக் கேட்டறிந்தார்.
ஜப்பானின் தலைமை சங்கநாயக்கர் சாஸ்திரபதி யாலகமுவே தம்மிஸ்ஸர அனுநாயக்க தேரர் அவர்கள் இப்புண்ணிய நிகழ்வின் ஆரம்ப உரையை நிகழ்த்தியதோடுஇ பிரதேசத்திலுள்ள முக்கிய மகாசங்கத்தினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் அமைச்சர்களான கயந்த கருணாதிலக்கஇ சந்திம வீரக்கொடிஇ தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாயணக்காரஇ காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2016.01.22
Post a Comment