காதி நீதவான்களாக பெண்களை, நியமிக்க கோருவது இஸ்லாத்திற்கு மாற்றமானது - மௌலவி முபாறக்
காதி நீதவான்களாக பெண்களையும் நியமிக்க கோருவது இஸ்லாமிய அடிப்படைகளுக்கு மாற்றமானதாகும் என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,
இஸ்லாமிய காதி நீதித்துறை என்பது ஆங்கில நீதித்துறை போன்று வெறுமனே படிப்போடு சம்பந்தப்பட்டதல்ல. அது அறிவுபூர்வமானதும் குர்ஆன் ஹதீதோடும் சம்பந்தப்பட்டதுமாகும். பெண்கள் பெரும்பாலும் உணர்வுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. பெண்கள் விவாகரத்து வழக்கின் நீதிபதிகளாக வரவேண்டும் என்றால் நாட்டில் இஸ்லாம் அல்லாத விவாகரத்துத்துறை உள்ளது. அதில் இணைந்து கொள்ளலாம். இஸ்லாம் என்ற பெயருடன் உள்ள முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் பெண்கள் மட்டுமல்ல உலக நீதிச்சட்டம் படித்த சட்டத்தரணிகளை நியமிப்பது கூட இஸ்லாத்துக்கு மாற்றமான செயலாகும் என்பதை உலமா கட்சி தொடர்ச்சியாக சொல்லி வருகிறது.
இவ்வாறு நாம் கூறுவதன் மூலம் பெண்கள் திறமையற்றவர்கள் என்றோ கௌரவம் குறைந்தவர்கள் என்றோ பொருள் அல்ல. இஸ்லாத்தை பொறுத்த வரை ஆணை விட அதிக கௌரவத்தை பெண்ணுக்கே வழங்கியுள்ளது. ஒரு தந்தையை விட தாய்க்கு மூன்று மடங்கு உயர்வுள்ளதாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிக தெளிவாக சொல்லியுள்ளார்கள். அதே வேளை அந்தத்தாய் என்ற பெண்ணின் கடமைகள் என்ன தந்தை என்ற ஆணுக்குரிய கடமைகள் என்ன என்பதையும் நபிகளார் தெளிவு படுத்தியுள்ளார்கள். வீட்டை, நாட்டை, சமூகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை இஸ்லாம் ஆணின் தலையில் சுமத்தியுள்ளது.
பெண்களுக்குரிய கௌரவம் வேறு அவர்களை நீதவான்களாக நியமிப்பது என்பது வேறு. ஏதும் பிரச்சினைகளின் போது இரண்டு ஆண்களின்; சாட்சியத்தையும் இனனொரு ஆண் இல்லையென்றால் அவனுக்கு பதிலாக இரண்டு பெண்களின் சாட்சியத்தையும் சாட்சியத்தையும் வேண்டி நிற்கும் இறை மார்க்கம் இது என்பதை சகலரும் பரிந்து கொள்ள வேண்டும். இறைவனின் கட்டளைகளில் நிச்சயம் நமக்கு தெரியாத பல நுட்பங்கள் இருக்கும்.
ஹுதைபிய்யா உடன்படிக்கையின் பின் நபிகளாரின் மனைவி உம்மு சலமா (ரழி) அவர்களின் ஆலோசனைப்படி நபியவர்கள் தீர்ப்பளித்தார்கள் என காண்கிறோம். ஆக பெண்ணின் ஆலோசனையை நபியவர்கள் கேட்டு விட்டு ஆணான நபியவர்களே அந்த தீர்ப்பை நீதிபதியாக நின்று தீர்ப்பளித்துள்ளார்களே தவிர தமது மனைவியை நீதிபதியாக அவரது ஆலோசனை பிரகாரமான அந்த தீர்ப்பை அறிவிக்கும்படி சொல்லவில்லை.
அதே வேளை நாம் பெண்களை காதி நீதவான்களாக நியமிக்க கூடாது என்றுதான் சொல்கிறோமே தவிர ஆலோசகர்களாக நியமிக்க வேண்டாம் என சொல்லவில்லை. தேவையென்றால் ஒவ்வொரு காதிக்கும் பெண் தரப்பில் வாதிடும் பெண் ஆலோசகரை நியமிப்பதில் எம்மிடம் எதிர்ப்பில்லை.
ஆகவே காதி நீதிவான்களாக பெண்கள் நியமிப்பதை வலியுறுத்துவது இஸ்லாத்துக்கு முரண்பாடானது என்பதுடன் இந்நியமனத்தின் போது பல்கலைக்கழக பட்டம் பெற்ற மௌலவிமாருக்கு முதன்மை வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
நல்ல கருத்து மௌலவி அவர்களே,
ReplyDeleteஇஸ்லாத்தோடு யதார்த்தத்தையும் புரிந்து கூறியுள்ளீர்கள்.
பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் யதார்த்தமாகவே (பலம், பலவீனம் என) நிறைய வேறுபாடுகள் என்பதை உண்மையான பெண்ணிலைவாதிகளோ, அல்லது (பாலியல் நோக்கில் பெண்களை தூக்கிப்பிடிக்கும்) பரந்த மனசு படைத்தவர்களோ புரிந்துகொள்ள வேண்டும். புரியாவிட்டால் (அச்சம், தடுமாற்றம், பதற்றம், யாரிலாவது தங்கியிருக்க நாடுதல், திடீரென்று உணர்ச்சிவசப்படல் போன்ற) பலகீனமான உணர்வுகள், மற்றும் (மிருதுவான உடலமைப்பு, அவர்களே உணரும் இயலாமை போன்ற) உடலியல் ரீதியான பலகீனங்கள் என்பவற்றை அறிய தமக்குத்தெரிந்த பெண்களை (வேலைத்தளங்களிலோ, வீடுகளிலோ) சந்தித்து அறியலாம்.
முபாரக் மெளலவி அவர்களே, உங்களது தனிப்பட்ட புரிதல்களை இஸ்லாமிய தீர்ப்பாக கூறுகிரீர்களா? என தோன்றுகிறது. ஏனெனில் நீங்கள் கூறும் காரணங்கள் ( தர்கிக்க முனைவது) தர்க்க ரீதியாக ஒன்றுக்கு பின் ஓன்று முரணாக இருக்கிறது. இஸ்லாம் இல்லாத நீதித்துறைக்கு ( இங்கும் மனிதர்கள் தான் உள்ளார்கள்...??? இஸ்லாம் மார்க்கம் முழு மனித சமூதாயத்துக்குமாக தான் அருளப்பட்டது ) முஸ்லிம் பெண்கள் நீதிபதிகளாக போகலாம் ஆனால் இஸ்லாமிய நீதிமன்றத்துக்கு அவர்கள் நீதிபதிகளாக வரமுடியாது என்கிறீர்கள். உணர்வு என்பது எல்லோருக்கும் உண்டு. ஆயிஷா (ரலி ) அவர்களின் ஹதீஸை ஏற்றுக் கொள்ளலாம், ஏன் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கதிஜா (ரலி) அவர்களின் பங்களிப்புகளை சற்று சீர்தூக்கி பாருங்கள் பெண்களின் உறுதியையும், புரிதல்களையும், ஆளுமையையும் மனித சமுதாயத்தால் அறிந்து கொள்ள முடியும். கன்மூடிக்கொண்டு பெண்களை விட ஆண்கள் உறுதியானவர்கள், உயர்ந்தவர்கள், வல்லவர்கள், என்று கூறி பெண்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்க முடியாது, அந்தந்த சந்தர்ப்ப சூல்னிலைகலின் அடிப்படையில் தான் தீர்மானங்கள் எட்ட முடியும் என்பது எமது தாழ்மையான கருத்தாகும்.
ReplyDeleteஇஸ்லாத்தில் பெண்கள் நீதிபதிகளாக இருக்க முடியாது என நேரடியான தீர்ப்பு இருந்தால் தயவு செய்து ஆதாரத்துடன் அதை தெரிவிக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
Al Visath!
ReplyDeleteHope this link may give you an answer
http://youtu.be/La-B_tLlzYo
1people will not succeed who are commanded by a woman.
Source: Sahih Bukhari 4163, Grade: Sahih
2. When the best among you are your rulers the rich amongst you are liberal and the affairs of your State are decided upon by consultation among yourselves, then the surface of the earth is better for you than its inside. And when the worst among you are your rulers, the rich among you are miserly and the affairs of the State are entrusted to women, then the inside of the earth is better for you than its surface (Tirmidhi).
பால்வேறுபாடுகளுக்கும் மூளையினால் ஆற்றப்படும் செயற்பாடுகளுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.
ReplyDeleteஆண்கள் என்றால் அறிவுச் சனாதனிகள் என்றும் பெண்கள் என்றால் ஏதோ மடைமையில் ஊறியவர்கள் என்றும் பில்டப் வழங்கும் அத்தனைபேரும் ஆண்களே.
இறைவனின் நீதி இவ்வாறு பாரபட்சமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. உங்களுடைய ஆணாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக மதவிழுமியங்களை பெண்களுக்கு எதிராகத் திரித்துவிட்டு அவர்களை சமாதானப்படுத்துவதற்காக தாய் அந்தஸ்து அது இது என்று ஏமாற்றவா பார்க்கின்றீர்கள்..? விலையுயர்ந்த தங்கக் கூண்டில் நீங்கள் அடைத்து வைப்பதால் உள்ளே அடைபட்டிருக்கும் பறவை மகிழ்ந்து விடுமா என்ன..?
அதுசரி, ஆரம்பத்தில் பெண்களைத் திறமைகுறைவானவர்கள் என்று கூறிவிட்டு பின்பு அப்படிக் கூறவில்லை என்று ஏன் ஜல்லியடிக்கின்றீர்கள். வீட்டில் மனைவியிடம் வாங்கிக்கட்டிக்கொள்ளப்போகும் பீதியினாலா மௌலவி..?
Jesslya Jessly Being a Science Graduate ( I assume) how can you say that there is no difference between a male and a females brain?
ReplyDeletein case if you don't you can read this article. ( there are many more proven articles like this ) where male and female brain cells work in different way in a same Situation. As a women you know 30 days of a month, there are days where you are uncomfortable in many ways.during those days you cannot
http://www.theguardian.com/science/brain-flapping/2013/dec/04/male-female-brains-real-differences
You are right when it comes to where Allah has given equality to women and men by uplifting women in one case over men and uplifting men in one case.
No one says that we cannot listen to women or take their advices, ( dont know if you have been brought up like that) What Islam says women cannot hold Leadership over men. The decision make should be a Man. ( it can be your idea but the final say has to be with men).
In noway where we can oppress the women.
As men we cannot even stop them being going to the masjid. but Rasoolullah (sal) said ;;that do not stop your women from going to the masjid but for them, their prayer in the house is better than the prayers in the masjid, their prayers in the room is better than in the house''
I would like you to watch that link which i have posted, its by Zakir naik, he puts in a nice way.