Header Ads



நாட்டின் பொருளாதாரம் நூல் அறுந்த பட்டத்தை போல மாறியுள்ளது - பந்துல குணவர்தன

ஒரு அமெரிக்க டொலருக்கு இணையாக இலங்கை ரூபாவின் மதிப்பு 150 ரூபாவாக வீழ்ச்சியடைவதை தவிர்க்க முடியாது போகும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு அமெரிக்க டொலரின் விலை 146 ரூபாவாகும். 1976ம் ஆ்ணடுக்கு பின்னர் ரூபா இந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்தமை இதுவே முதல் முறையாகும் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் இன்று (20) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் தற்போது இணைப்பு நூல் அறுந்து போன பட்டத்தின் நிலைமைக்கு சென்றுள்ளது. ரூபாவின் மதிப்பு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. முதலீட்டாளர்கள் தற்போது இலங்கைக்கு வருவதில்லை.

அதேபோல் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு செல்லாதவர்கள் எவருமில்லை.

அரசியல்வாதிகள்இ விளையாட்டு வீரர்கள்இ கலைஞர்கள் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்படுவதால், இலங்கையின் தோற்றத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வராத நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. அய்யோ என்னை வழமிக்க அரபுலகமே தினரிக்கொன்டிருக்கு 28டொலர்சரிவைக்கன்டு இவர்கள் கடனுக்குமேல் கடன்வாங்கி கொல்லையடித்துவிட்டு 1975-2016உடன் ஒப்பிட்டு ஒப்பாரியும் அதுக்கு நூல் அருந்த பட்டமென்ரு பழமொழிவேரு என்ன பந்துல சார் இது நியாயமா??

    ReplyDelete
  2. முன்னாள் கல்வி அமைச்சர் அதனால் அறிவு கடல்

    ReplyDelete

Powered by Blogger.