Header Ads



அரசியலமைப்புத் திருத்தத்திற்கு, மகிந்தவும் பச்சைக்கொடி

அரசியலமைப்பில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்காகவே 62 இலட்சம் மக்கள் வாக்களித்ததாகவும் அதனால் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு தாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஜே.ஆர் ஜயவர்தனவே ஆரம்பித்ததாக சுட்டிக்காட்டிய மஹிந்த ராஜபக்ஸ, தற்போது அவரது உறவுமுறை மகன் அதனை மாற்ற முன்வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பில் தமக்குள் கருத்து முரண்பாடு இல்லை என குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய அரசியலமைப்பின்படியே அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

1 comment:

  1. காட்டியது பச்சைக்கொடியாக இருந்தாலும் கலுத்தில் தொங்குவது சிவப்புகொடியே என்பதனையும் ஞாபகத்தில் வைத்துக்கொல்வது முக்கியம்

    ReplyDelete

Powered by Blogger.