மஞ்சள் பாதையைக் கடப்பதற்கான, மின்சார இயந்திர தொழிட்ப ரோபோ கண்டுபிடிப்பு
-இக்பால் அலி-
மாவத்தகம பிரின்ஸ் சந்திரசேன குளிர்சாதனப் பெட்டி திருத்தும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஒருவர். இவர் சிறு பராயம் முதல் இன்று வரை புதிய கண்டு பிடிப்புக்களைச் செய்து பல முதல் தர விருதுகளைப் பெற்றவர். சர்வதேச மட்டத்தில் வருடாந்தம் நடத்தும் புதிய கண்டு பிடிப்பாளர் போட்டியில் பங்கு கொண்டு முதல் பரிசினையும் கூட பெற்றுள்ளார். கைகளை இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மவுசு பயன்படுத்தும் நவீன முறை கருவியை கண்டு பித்தமைக்காக சுவிஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு முதல் பரிசினைப் பெற்றவர். 148 நாட்டவர்கள் இந்தப் போட்டிக்காகப் பங்கேற்று இருந்தனர்.
அதேவேளையில் பால் பண்ணையாhளர்களின் நன்மை கருதி புதிய பால் குளிரூட்டியை கண்டு பிடித்து ஜனாதிபதி விருது எனப் பல தரப்பட்ட விருதுகளைப் பெற்றவர். இவர் போக்குவரத்துப் பொலிஸாரின்றி பாடசாலை மாணவர்கள் மஞ்சள் கோட்டுப் பாதையைக் கடப்பதற்கான மின்சார இயந்திர தொழிட்ப கருவியை கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தக் மின் தொழில் நுட்பக்; கருவியை பாடசாலை ஆரம்பிக்கும் போது பாதையின் நடுவில் வைத்து கையிலுள்ள ரிமோல் கொண்ரோலை சுவிசசை அழுத்தினால் இரு பக்கங்களிலும் வரும் வாகனங்கள் நிறுத்தும் சமிஞ்சை மின் ஒளிரும் அதற்கேற்ப கைகள் அசையும் அப்பொழுது மாணவர்கள் பாதையை இலகுவாக கடக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த புதிய கண்டு பிடிப்புக்காக சமீபத்தில் விஞ்ஞான தொழில் நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment