Header Ads



இனவாதத்தை இழுக்க வேண்டாம் - பாராளுமன்றத்தில் ரணில்

சில சம்பவங்கள் தொடர்பான செய்தியளிப்பின் போது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் நடந்து கொள்ளும் விதம் மிகவும் கவலைக்குரியது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகம மற்றும் எம்பிலிப்பிட்டிய சம்பவங்கள் குறித்து சில ஊடகங்களின் செய்திகளை வெளியிட்ட விதம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொலிஸ் சம்பந்தமாக சமூகத்தில் காணப்படும் விவாதமான நிலைமை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று சபை ஒத்திவைக்கப்படும் போது முன்வைத்த யோசனைக்கு பதிலளித்து பேசும் போதே பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

வேட்டைக்கு சென்று இனவாதத்தை இழுக்க வேண்டாம். இந்த வேட்டையை ஊடகங்களே செய்கின்றன. வேட்டைக்கு செல்ல வேண்டும் நாம் அதனை எதிர்க்கின்றோம்.

இனவாதத்தை தூண்டும் வகையில் சில ஊடகங்கள் செயற்படுகின்றன எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.