ஞானசாரருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை, மேற்கொள்ள சட்டத்தரணிகள் ஆர்வம்
நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து சட்டத்தரணிகள் சங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜெப்ரி அழகரட்னத்தை நேரில் சந்தித்து தான் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் விடிவெள்ளிக்கு கருத்து வெளியிடுகையில்,
ஞானசார தேரர் கடந்த பல வருடங்களாக பல்வேறு வழிகளிலும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறார். ஊடகவியலாளர் மாநாட்டில் புகுந்து பௌத்த பிக்குவை அச்சுறுத்தினார்.
பின்னர் அமைச்சரை அச்சுறுத்தினார்.
இப்போது நீதிபதியை அச்சுறுத்தியிருக்கிறார். நீதித்துறையை அவமதிக்கும் வகையில் தொடராக பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
இது தொடர்பில் இந்த நாட்டின் அதிகாரம் வாய்ந்த சட்ட நிறுவனம் என்ற வகையில் சட்டத்தரணிகள் சங்கம் விசேட அவதானம் செலுத்த வேண்டும். மட்டுமன்றி இதனைக் கண்டித்து உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிடுவதுடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசேட மனு ஒன்றையும் தாக்கல் செய்ய வேண்டும்.
அத்துடன் இந்த வழக்கில் சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் நேரில் ஆஜராகவும் வேண்டும். தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்தும் இவருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று நான் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜெப்ரி அழகரட்னத்தை நேரில் சந்தித்து வேண்டுகோள்விடுத்துள்ளேன்.
இந்த வேண்டுகோள் தொடர்பில் உடன் கவனம் செலுத்துவதாக அவர் உறுதியளித்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை எடுத்துச் செல்வது தொடர்பில் சாதகமாக ஆலோசிப்பதாகவும் அதற்குத் தேவையான சட்டத்தரணிகளை தமது அமைப்பு சார்பில் நியமிக்க முடியும் என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார்.
ஏற்கனவே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக உபுல் ஜயசூரிய பதவி வகித்த சமயம், அளுத்கம சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சங்கத்தின் சார்பில் துணிச்சலுடன் செயற்பட்டதையும் நான் இப்போதைய தலைவர் ஜெப்ரி அழகரட்னத்திடம் சுட்டிக்காட்டினேன்.
உபுல் ஜயசூரிய சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவில் அங்கம் வகிப்பதால் இந்த விடயத்தை அவரது கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளேன். அவரும் இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் மேலும் தெரிவித்தார்.
எப்படியோ வெளிய வரவிடாமல் பாருங்கப்பா இவன் பெரிய கில்லாடி சர்வேதேச பயங்கரவாதி.
ReplyDeleteசுஹைர் சார், சுப்பர்... இதான் இதுதான் எமக்கு தேவை. அடிக்க வேண்டிய நேரத்தில் அடிக்க வேண்டிய இடத்தில் தைரியமாக அடிக்க வேண்டும் என்பது. உங்களை போன்ற நெஞ்சுரம் உள்ளவர்களை பார்த்தாவது அரசியல் தலைவர்கள் என்று கூறுபவர்கள் தங்களுக்குள்ள சந்தர்பங்களை, வசதிகளை பாவிப்பார்களா??? இவர்களுக்கு இப்படியான அரசியல் சாணக்கியம், தந்திரம், தைரியம் உள்ளதா என்பது சந்தேகமே???
ReplyDeleteசுஹைர் சார், பாமி இயக்கம், கேணல் காடாபி, மறைந்த தலைவர் அஷ்ரப் போன்றவர்களின் அரசியல் பயணத்துக்கு மிகவும் உருதினையாக, ஆலோசகராக இருந்து அல்லாவுக்காக முஸ்லிம்களுக்காக மிக நீண்ட காலமாக மிகவும் காத்திரமான பணிசெய்து வருகிறீர்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூற விரும்புகிறோம். ஏன் MY3 ஐ ஆட்சிக்கு கொண்டு வருவதில் அவருக்கு சட்ட ஆலோசகராகவும் தைரியம் ஊட்டுபவராகவும் இருந்தீர்கள். இவைகளுக்கான நட்கூலி நிட்சயம் இறைவனிடத்தில் உண்டு. மிக்க நன்றி.
சுஹைர் சார், சுப்பர்... இதான் இதுதான் எமக்கு தேவை. அடிக்க வேண்டிய நேரத்தில் அடிக்க வேண்டிய இடத்தில் தைரியமாக அடிக்க வேண்டும் என்பது. உங்களை போன்ற நெஞ்சுரம் உள்ளவர்களை பார்த்தாவது அரசியல் தலைவர்கள் என்று கூறுபவர்கள் தங்களுக்குள்ள சந்தர்பங்களை, வசதிகளை பாவிப்பார்களா??? இவர்களுக்கு இப்படியான அரசியல் சாணக்கியம், தந்திரம், தைரியம் உள்ளதா என்பது சந்தேகமே???
ReplyDeleteசுஹைர் சார், பாமி இயக்கம், கேணல் காடாபி, மறைந்த தலைவர் அஷ்ரப் போன்றவர்களின் அரசியல் பயணத்துக்கு மிகவும் உருதினையாக, ஆலோசகராக இருந்து அல்லாவுக்காக முஸ்லிம்களுக்காக மிக நீண்ட காலமாக மிகவும் காத்திரமான பணிசெய்து வருகிறீர்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூற விரும்புகிறோம். ஏன் MY3 ஐ ஆட்சிக்கு கொண்டு வருவதில் அவருக்கு சட்ட ஆலோசகராகவும் தைரியம் ஊட்டுபவராகவும் இருந்தீர்கள். இவைகளுக்கான நட்கூலி நிட்சயம் இறைவனிடத்தில் உண்டு. மிக்க நன்றி.