நியூசிலாந்தில் இலங்கை ரசிகர்கள், வெளியேற்றபட்டமைக்கு எதிராக விமர்சனங்கள்..!
நியூசிலாந்தில் கிரிக்கட் போட்டியொன்றை பார்வையிடச் சென்ற இலங்கை ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறற்றப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து பொலிஸாரும் மைதான பாதுகாவலகர்களும் இவ்வாறு இலங்கை ரசிகர்களை வெளியேற்றியுள்ளனர்.
பாடல் பாடி ட்ரம் இசைக்கருவியை வாசித்து வந்த ரசிகர்களே மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் பொலிஸார் ரசிகர்களை வெளியேற்றியுள்ளனர்.
எவ்வித விளக்கமும் அளிக்காது தம்மை மைதானத்தை விட்டு வெளியேற்றியதாக கிரிக்கட் போட்டியைச் பார்வையிடச் சென்றிருந்த திலினி விஜேசிங்க என்ற யுவதி தெரிவித்துள்ளார்.
பொலிஸார் தமது கடமைகளை செய்திருந்தாலும், போட்டியை மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய சந்தர்ப்பத்தை இழக்க நேரிட்டதாகத் தெரிவத்துள்ளார்.
இவ்வாறு இலங்கை ரசிர்கள் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டமைக்கு நியூசிலாந்து ஊடகங்களும் சமூக வலையமைப்புக்களும் கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கும் நியூசிலாந்திற்கும் இடையில் நியூசிலாந்தின் ஈடன் மைதானத்தில் நடைபெற்ற டுவன்ரி20 போட்டியை பார்வையிடச் சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Post a Comment