யாழ்ப்பாணம் ஹதீஜா மகா வித்தியாலயத்தில், தங்கியுள்ள மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
-பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் அல் ஹதீஜா மகளீர் மகா வித்தியாலயத்தில் அகதிகளாக தங்கியுள்ள மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று (17) மதியம் மேற்கொண்டனர்.
யாழ்ப்பாணம் அல் ஹதீஜா மகளீர் மகா வித்தியாலயத்தில் அகதிகளாக தங்கியுள்ள மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று (17) மதியம் மேற்கொண்டனர்.
இப்பாடசாலையில் சுமார் 6 வருடங்களாக தாங்கள் வாழ்ந்து வருவதாகவும் மாற்றுஇடம் ஒன்றினை வழங்காமல் அகற்ற முயல்வதாகவும் அங்கு சென்ற செய்தியாளரிடம் குறிப்பிட்டனர்.
இப்பாடசாலையில் தற்போது 13 குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன் இவர்கள் அன்றாடம் கூலி தொழிலை மேற்கொண்டு வாழ்வாதாரங்களை முன்னெடுக்கின்றனர்.
இவர்களில் சிலரிடம் ஏனைய பகுதிகளில் வீடுகள் இருந்ததாகவும் அதனை தங்களது பிள்ளைகளிடம் வழங்கி விட்டு தற்போது நிர்க்கதியாக இங்கு தங்கி வாழ்வதாகவும் கூறுகின்றனர்.
ஆனால் இப்பாடசாலை தாங்கள் படித்த பாடசாலை அதனை அது மீளவும் இயங்க தங்களால் ஒத்துழைப்பு வழங்க முடியும்.எனினும் அதற்கு மாற்று இடமொன்றை ஏற்பாடு செய்தால் உதவியாக இருக்கும் என சுட்டிக்காட்டினர்.
1990 ஆண்டு ஹதீஜா முஸ்லீம் மகளீர் மகா வித்தியாலயம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.தற்போது யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் பெண்களிற்கான தனியான பாடசாலை அவசியமாக உள்ள காரணத்தினால் இப்பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கு வட மாகாண கல்வி அமைச்சு நிதி ஒதுக்கியுள்ளது.
மேற்படி விடயம் சம்பந்தமாக யாழ் மாவட்ட பிரதேச செயலாளர் திருமதி எஸ்.தெய்வேந்திரம் சகல குடும்பங்களிற்கும் கடிதம் மூலம் பாடசாலை கட்டிட வேலையை விரைவாக ஆரம்பிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதால் எதிர்வரும் 27.1.2016 அன்று பாடசாலையை விட்டு அனைவரும் வெளியேறி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுள்ளார்.
கதீஜா என்று எலுதவும் உம்முல் மூனீன்கள் பெயரை கொச்சை படுத்த வேன்டாம் ஹதீஜா என்று பெய்ர் இல்லை
ReplyDelete