Header Ads



ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கத்தினால் சவுதி, கத்தார், துபாய் பங்குச்சந்தை வீழ்ந்தது

இரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்ட பிறகு, சவுதி அரேபியப் பங்குச் சந்தை ஏழு சதவீதத்துக்கும் அதிகமான அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

அரபு உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தையான சவுதி அரேபியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி பல நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கத்தார் மற்றும் துபாய் பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சியே காணப்பட்டன.

இதனிடையே இரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நாளொன்றுக்கு ஐந்து லட்சம் பாரல்கள் அதிகரிக்க தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளது.

அப்படி இரான் தனது நாளாந்த எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்குமானால், உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் குறைய வழி வகுக்கும்.

கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரு பாரல் கச்சா எண்ணெய் இப்போது 29 டாலர்கள் அளவுக்கு குறைந்துள்ளது.

நாற்பது ஆண்டுகளாக இரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை நீக்கப்பட்டுள்ளதை அடுத்து, இரான் தனது எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்கவுள்ளது.

எண்ணெய் ஏற்றுமதி மீதிருந்த தடை காரணமாக இரானுக்கு இதுவரை 160 பில்லியன் டாலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது.

5 comments:

  1. அமெரிக்க இஸ்ரேலின் சதி திட்டம் அரபுகளின் பொருளாதாரத்தை உடைக்க எடுத்த முயற்சிதான் ஈரான் மீதான பொ.தடை நீக்கம்

    ReplyDelete
    Replies
    1. Rubbish, Every country should be able stand on its own, economically. Saudi as well as Iran.

      Delete
  2. We need unity saudu arabia and iraan.yahoodi next target siya sunni war mean saudi iran war.may allah guide them both.

    ReplyDelete
  3. என்னதான் சதிதிட்டமாக இருந்தாலும் இதெல்லாம் அரபுலகில் அல்லாஹ்வினுடய சோதனை என்ருதான் இப்போதைக்கு சொல்லவேன்டும் காரனம் அல்லாஹ்வினுடைய செல்வத்தையும் செலிப்பையும் சாதாரனமாக்கி அன்னியனுடய கன்டுபிடிப்புக்கலுக்கும் கலாசாரத்திற்கும் முன்னுரிமை கொடுத்து பணத்தினை அல்லியிரைத்தால் மடையர்கலானோம் நாம் என்பதை ஒரு முரை உனர்த்தவே இந்த சோதனை அதுமட்டுமல்ல இதைவிட எண்னைவழமிக்க சகோதர நாடுகலை நாசமாக்கிக் கொன்டிருந்தபோது பேசாமடந்தையாக இருந்ததையும் சேர்த்துகொல்லமுடியும் எதிராலிகலின் சூட்சுமம்தான் இன்ருவரைக்கும் வெற்றீநடையும் போட்டுக்கொன்டிருக்கின்ரது முடிவு அல்லாஹ்வினுடைய கையில் மட்டுமே தங்கியுள்ளது

    ReplyDelete

Powered by Blogger.