கட்டார் வாழ் உறவுகளுக்கு இஸ்லாமிய சன்மார்க்க நிகழ்ச்சிகள்
இலத்திரனியல் உலகத்தில் இதயங்களை மார்க்கத்திற்கு அப்பால் இழந்துவரும் இஸ்லாமிய உறவுகளுக்கு நாம் செல்லவேண்டிய பாதையை பண்பாக காட்டுவதற்கு இந்நிகழ்ச்சிகள் ளுடுனுஊ எஸ்.எல்.டி.சி. கட்டார் அமைப்பினால் வடிவமைக்கப்பட்டு வழிநடத்தப்பட்டு வருகிறது.
அந்நிய கலாசார கழிவுகளுக்குள் புதையுண்டுவரும் நமது முஸ்லிம் பெண்களை கண்ணியப்படுத்தி அழகுபார்பதுதான் இஸ்லாத்தின் வழி இந்தப் பெண்கள்தான் நாளைய சுவர்கத்தின் சொந்தக்காரர்கள். இச் சுவர்க்கத்துப் பெண்களை செதுக்கி எடுப்பதுதான் நமது முஸ்லி;ம் உம்மாவின் உயிர் மூச்சு.
நிகழ்கால உலகின் மாயையில் மயங்கி நிரந்தர உலகின் நிம்மதியை இழந்துவரும் மணிதனுக்கு மரணத்தை நினைவுபடுத்தி நாளைய வாழ்க்கையை சீர்படுத்தவேண்டிய தேவை இக்காலத்தில் உணரப்படாவிட்டால் சீரழிவை தவிர்க்கமுடியாது போய்விடும்.
உறவுகளை தொலைத்து உணர்வுகளை குழியில் புதைத்து உறவுகளின் வாழ்கையில் ஒளியேற்ற திரிகளாய் உருகும் நமது வெளிநாட்டில் வாழும் உறவுகளை இஸ்லாமிய காட்டாற்றில் கழுவவேண்டிய தேவை வெள்ளிடை மலையாக தெரிகிறது.
மார்க்கத்தின் பெயரில் மூர்க்கத்தில் மூள்கியிருக்கும் முயல் கொம்புக்காரர்களுக்கு மத்தியில் நமது ஸலபுகளின் கொள்கையில் பற்றுதியாக இருப்பதன் அவசியம் அனைவருக்கும் தேவையாய் ஓங்கி ஒலிக்கிறது.
மேற்கூறப்பட்ட தொனியில் பின்வரும் தலைப்புகளில் உரைகள் நடைபெறவிருக்கிறது.
01. சுவர்கத்துக்கு தகுதியான பெண்கள்
02. கறையற்ற உள்ளம்
03. மனிதனும் மரணமும்
04. வெளிநாட்டு வாழ்க்கையில் இழந்ததும் அடைந்ததும்
05. முரண்பாடுகளுக்கு மத்தியில் கொள்கை உறுதி
06. கேள்வி பதில்
இத்தலைப்புகளில் பிரபல உலமாக்களான அஷ்ஷெய்க். முஜாஹிட் றசீன், அஷ்ஷெய்க். அஷ்ஹர் யூசுப் சீலானி ஆகியோர்களால் இம்மாதம் ஜனவரி, 2016
• 14ம் திகதி வியாழக்கிழமை இரவு 8.30 மணி முதல் 10.00 மணி வரை கஸ்ஸாபி பள்ளிவாசலிலும்.
• 15 ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 7.00மணி முதல் 9.30 மணி வரை பனார் கேட்போர் கூடத்திலும்.
மேலதிக தகவல்களுக்கு ளுடுனுஊ யின் இணையத்தளத்திற்கு பிரவேசியுங்கள் றறற.ளடனஉஙயவயச.ழசப
சொற்பொழிவுகள் இடம்பெற ஏற்பாடகியிருக்கிறது. பெண்களும் கலந்து கொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்நிகழ்வுகளில் கலந்து பயன்பெறுமாறு ளுடுனுஊ கட்டார் அமைப்பினர் கட்டார் வாழ் உறவுகளுக்கு வாஞ்சையுடன் அழைப்புவிடுக்கின்றனர்.
தகவல்: அபு உமைர் ஆல் சூரி
Post a Comment