Header Ads



ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக, பரிசோனை செய்துள்ளதாக வடகொரியா அறிவிப்பு


வடகொரியா நடத்திய ஹைட்ரஜன் அணுகுண்டு பரிசோதனையால் தங்கள் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் இணைந்து ஹைட்ரஜன் வெடிகுண்டு மூலம், ஹிரோஷிமா, நாகசாகி மீது தாக்குதல் நடத்தியது.

இதனால் ஏற்பட்ட தாக்கங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு வடகொரியா அணு ஆயுத பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமெரிக்கா மீது தாக்குதுல் நடத்தும் அளவுக்கு எங்களிடம் ஆயுத பலம் உள்ளது என வடகொரியா எச்சரித்தது.

இந்நிலையில், வடகொரியாவின் அணு பரிசோதனை கூடம் அருகே இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது, 5.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்திற்கு, வடகொரியா ஏதேனும் புதிதாக அணுகுண்டை பரிசோதித்திருக்கலாம் என ஜப்பான் சந்தேகம் எழுப்பிய நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக பரிசோனை செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்தது.

இதுகுறித்து ஜப்பான் பிரதமர், வடகொரியாவின் அணுகுண்டு பரிசோதனை, ஜப்பானின் உள்நாட்டு பாதுகாப்பு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்.

ஆனால், இதற்கு நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம் என்றும் இதனை எங்களால் சகித்துக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.