Header Ads



அட்டப்பள்ளம் சகீதா வித்தியாலய, வீதியின் அவலம் தீருமா...?

-மு.இ.உமர் அலி-

நிந்தவூரில்  அட்டப்பளம் மிகவும் பின்தங்கிய ஒரு பிரதேசமாகும்.இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை  உடைய  இப்பிரதேசத்தில்  முஸ்லீம்இதமிழ் மக்கள்  வாழ்கின்றார்கள். கமுஃகமுஃஅட்டப்பளம்  விநாயகர் வித்தியாலயமும் இகமுஃகமுஃஅல் சஹீதா  வித்தியாலயமும்  இங்குள்ள இரு கல்வியின் கண்களாகும்.

படத்தில் காண்பது  அட்டப்பளம் சகீதா  வித்தியாலயத்திற்கு  செல்லும் வீதியாகும்.வீதியின்  நடுவிலே  இரு இடங்களில் மின்சார கம்பங்களிரண்டு  முனைத்துக்கொண்டு  காணப்படுகின்றன.

கிரவல் வீதியாக இருந்த  வீதி  கொங்கிரீட்  இடப்படும் முன்னர் இந்த மின் கம்பங்கள் அகற்றபட்டிருக்க  வேண்டும்.ஆனால்  அவசர அவசரமாக  போட்டு முடிக்கப்பட்ட இந்த கொங்கிறீட்டு  வீதிகளின்  முழுவதுமான பயனை மக்களனுபவிப்பதற்கு இந்த  மின்கம்பங்கள்  தடையாக  உள்ளதாக இப்பிரதேச மக்கள்  கருத்துத்தெரிவிக்கின்றனர்.

மின்சார  சபையினருக்கு  இது பற்றி  பலமுறை தெரியப்படுத்தியும்  பின்தங்கிய பிரதேசம் என்பதற்காகவோ  என்னவோ  இன்னும் இந்த மின்கம்பங்கள் பிடுங்கி  ஓரமாக நடப்படாமல்  இருக்கின்றது.

இனியாவது  குறித்த அதிகாரிகள் இதனை கண்டு கொள்வார்களா?

No comments

Powered by Blogger.