Header Ads



காவியடை தரித்தவர்கள் தொந்தரவு செய்யவும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவும் இடமளிக்கக்கூடாது - ஹக்கீம்

காவி உடை தரித்தவர்கள் நீதிமன்றங்களுக்கு தொந்தரவு செய்வதற்கு இடமளிக்க முடியாதெனத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நிலைமை மீண்டும் தலைதூக்க இடமளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார். 

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்; 

அரசியல்வாதிகள் தவறிழைத்தால் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை. சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்தால் தமக்குப் பிரச்சினைகள் வரும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஒரு ஊடகவியலாளர் மாநாட்டினுள் காவி உடை தரித்தவர்கள் நுழைந்து தாக்கியபோது அதனை வேடிக்கைப் பார்க்கும் நிலைதான் கடந்த ஆட்சியில் காணப்பட்டது. 

இந்நிலை இனியும் தொடர அனுமதிக்க முடியாது. அதேவேளை காவி உடை தரித்தவர்கள் நீதிமன்றங்களுக்கு தொந்தரவு செய்வதற்கு இடமளிக்க முடியாது. கடந்த ஆட்சியை போல் இந்த ஆட்சியிலும் சட்டத்தில் இருந்து தப்பிக்கும் நிலைக்கு இடமளிக்க கூடாது. தகவலறியும் உரிமைச் சட்டம் அமுல்படுத்தப்படும் போது அது மக்களை மேலும் பலப்படுத்தும், ஊழல்களை வெளிப்படுத்தும். சட்டமும் ஒழுங்கும் துளிர்விடும். பொலிஸாரின் கடமையில் மாற்றம் வரும் என்றார்.  

8 comments:

  1. சட்டம் தனது கடமையை செய்யும் என நம்புகிறோம். அனைவரும் இந்த நாட்டின் குடிமக்கள் தான், அனைவரும் சமமானவர்களே என்பதை நீதி மன்ற ஆசனத்தில் இருப்பவர் மிகத் தெளிவாகவும் உறுதியான மனோ நிலையிலும் இருப்பார் என நம்புகிறோம்.

    ReplyDelete
  2. காவி உடை தரித்தவர்கள் என்று பொதுவாக சர்வ சாதாரணமாக கூறுவது, அனைத்து காவி உடை அணிபவர்களையும் குறிப்பதோடு, இது சாதாரண புத்த மத தேரர்களினதும், மக்களினதும் உணர்வுகளை தூண்டுவதாக அமைந்து விடக் கூடாது என்பதை கருத்தில் கொள்வது நல்லதாகும். ஏற்கனவே காவி உடை பற்றி கதைத்து பெரும் சர்ச்சைக்கு உட்பட்டது ஞாபகம் இருக்கும் என நினக்கிறோம். இனவாதிகளுக்கு இப்படியான பேச்சு பிழையான அர்த்தம் கற்பித்து பெரும்பான்மை மக்களின் மனதில் கால்புனர்ச்சியை ஏற்படுத்த வழிவகுக்கும். இதற்கும் கடுமையான விமர்சனங்கள் வரலாம்.

    ReplyDelete
  3. காவி உடை தரித்தவர்கள் என்று பொதுவாக சர்வ சாதாரணமாக கூறுவது, அனைத்து காவி உடை அணிபவர்களையும் குறிப்பதோடு, இது சாதாரண புத்த மத தேரர்களினதும், மக்களினதும் உணர்வுகளை தூண்டுவதாக அமைந்து விடக் கூடாது என்பதை கருத்தில் கொள்வது நல்லதாகும். ஏற்கனவே காவி உடை பற்றி கதைத்து பெரும் சர்ச்சைக்கு உட்பட்டது ஞாபகம் இருக்கும் என நினக்கிறோம். இனவாதிகளுக்கு இப்படியான பேச்சு பிழையான அர்த்தம் கற்பித்து பெரும்பான்மை மக்களின் மனதில் கால்புனர்ச்சியை ஏற்படுத்த வழிவகுக்கும். இதற்கும் கடுமையான விமர்சனங்கள் வரலாம்.

    ReplyDelete
  4. Rauf Hakim talks like he was in the opposition and not a part of the last regime.

    ReplyDelete
  5. Muslim will not forget that SLMC leader's former Government is responsible for attacking mosque, hijab and our food.

    Rauf Hakim cannot take this off from SL Muslim's memories.

    ReplyDelete
  6. Mr Raufhakim please keep silent your mouth it's better for all Muslim now don't play u r political game now

    ReplyDelete
  7. "Opposition", "last regime" ..bla...bla are not the issue at this time. The need of the time is to take the approppriate stance and speak for our legitimate rights and oppose what needs to be opposed, weather while sitting in the opposition or from within the government.
    காவி உடை தரித்துக் கொண்டு காடைத் தனம் புரிபவர்களைத் தான் அவர் சுட்டிக் காட்டுகிறார் என்பது பெரும்பான்மை உற்பட்ட அனைவருக்கும் தெட்டத் தெளிவாக விளங்கும் ஒன்றாகும். பேச முடியாதவர்கள், விமர்சனங்களை எதிர் நோக்க முடியாதவர்கள் என்ற நிலைப் பாட்டில் நாம் இல்லை என்பதை அவர் எடுத்துக் காட்டி இருக்கிறார். அப்படி இல்லாது நாம் அசந்து, பின் வாங்கி, குட்டக் குட்ட குனிகின்றவனும் மடையன், குனியக் குனிய குட்டுகின்றவனும் மடையன் என்ற சூனியத்திலிருந்து வெளியே வர வேண்டாமா?

    ReplyDelete
  8. This is an excellent statement. There is no any wrong

    ReplyDelete

Powered by Blogger.