கோயில்களில் ஆடைக்கட்டுப்பாட்டுக்கு, இடைக்காலத்தடை
-bbc-
தமிழகத்தில் உள்ள இந்து கோயில்கலுக்குள் நுழைய, தனி நபர் நீதிபதி அமர்வு விதித்த புதிய ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் இந்து கோயில்களில் நுழைவதற்கு ஆடை கட்டுப்பாடு விதித்து, தனி நீதிபதி நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டில் ஆஜராகிய மாநில அரசு தலைமை வழக்கறிஞர் சோமாயாஜி, முந்தைய உத்தரவில் கூறியுள்ளப்படி கோயில்களுக்குள் நுழையும் பக்தர்கள் மற்றும் பிறருக்கும் ஆடை கட்டுப்பாடு விதிப்பது இயலாது என்று கூறி வாதாடினார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ராமசுப்ரமணியம் மற்றும் கிருபாகரன் ஆகியோரை கொண்ட அமர்வு, ஆடை கட்டுப்பாட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.
இதனால் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு முதல் அமலுக்கு வந்த ஆடை கட்டுப்பாடுகள் தொடர முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பான இருவேறு கருத்துக்கள் நிலவிவந்துள்ள சூழலில், இந்த இடைக்கால தடை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
போங்கடா முட்டாள்கள் அறிவுகெட்டவனெல்லாம் நீதிபதியாக இருந்தால் இப்படித்தான் வரும்
ReplyDelete