ஈரானிடம் மன்னிப்புக் கேட்ட அமெரிக்கா
தங்கள் நாட்டு கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க படகுகள் மற்றும் வீரர்களை சிறைபிடித்த ஈரான், அமெரிக்கா மன்னிப்பு கேட்டதையடுத்து விடுவித்துள்ளதாக தகவல் வெளியாளியுள்ளது.
அமெரிக்காவுக்கு சொந்தமான இரு படகுகள் குவைத்-பஹ்ரைன் நாடுகளுக்கு இடையில் சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில் அந்தப் படகுகள் திடீரென பழுதானதால் திசைமாறி ஈரான் கடற்பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அனுமதியில்லாமல் தங்கள் நாட்டின் கடல் எல்லைக்கு நுழைந்ததாக கூறி அந்த படகுகளை ஈரான் சிறைப்பிடித்தது.
மேலும் அதில் இருந்த 9 ஆண்கள் ஒரு பெண் உட்பட கடற்படை வீரர்களை சிறைப்பிடித்து வைத்துள்ளது.
தங்கள் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி தொலைபேசி மூலம் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஷரிபை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment