Header Ads



சில பெற்றோர்களுக்கு தமது பிள்ளை, எத்தனையாம் ஆண்டு படிக்கிறது என்றுகூட தெரியாது - இம்றான் மகரூப்

-எம்.என்.எம்.புஹாரி-

கடந்த வருடம் வெளியாகிய 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் இலங்கையிலுள்ள் 98 கல்வி வலயங்களில் கிண்ணியா கல்வி வலயம் 98 ஆவது இடத்தையும் மூதூர் கல்வி வலயம் 96ஆவது இடத்தையும் திருகோணமலை கல்வி வலயம் 92ஆவது இடத்தையும் பெற்று பின்னடைந்ததற்கு அரசியல் தலையீடே பிரதான காரணமாகுமென குறிஞ்சாக்கேணி மகா வித்தியாலயத்தில் 1ம் தர மாணவர்களை வைபவ ரீதியாக இணைத்துக் கொள்ளும் நிகழ்வில் அதீதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மகரூப் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்-

இந்த அரசாங்கம் 2016ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு அதிகமான பணத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.அரசாங்கமும் கல்வி அமைச்சும் கல்வி அதிகாரிகளும் இவ்வாறு முனைப்பாக செயற்படும் போது நாங்கள் எங்களது கல்வி விடயத்தில் அதீத முனைப்பட செய்றபட வேண்டும்.

இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள் இச் சிறார்கள் தற்பொழுது எதிர் கொள்கின்ற சவால்கள் பிரச்சினைகள் எதிர் காலத்தில் எதிர் கொள்ளவிருக்கின்ற சவால்களை இலகுவாக முறியடிப்பதற்கு பாடசாலை களம் அமைத்துக் கொடுக்கின்றது.

அதே வேளை சில பெற்றோர்களுக்கு தங்களது பிள்ளைகள் எத்தனையாம் ஆண்டு படிக்கின்றார்கள் என்று கூட தெரியாமல் இல்லாதுள்ளது.இவ்வாறு இருக்காமல் தங்களது பிள்ளைகளின் கல்வி விடயம் தொடர்பாக குறித்த பாட ஆசிரியரோடு தங்களது பிள்ளைகளிடம் பெற்றோர் கலந்துரையாடுகின்ற போது தங்களது பிள்ளைகள் எதிர் காலத்தில் சிறந்த கல்விமான்களாக வருவதற்கு வழி அமைத்துக் கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.