Header Ads



கர்ப்பகாலத்தில் பாரசிடமால் சாப்பிட்டால், உடல் நலத்துக்குகேடு - ஆய்வில் புதிய தகவல்

வலி நிவாரண மருந்தாக ‘பாரசிடமால்’ மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தக் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

லண்டனில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற் கொண்டனர். கர்ப்பமாக இருந்த எலிகளுக்கு ‘பாரசிடமால்’ மருந்துகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து அவற்றுக்கு பிறந்த பெண் எலிகளுக்கு சிறிய கருப்பைகளும், அதில் இருந்து குறைந்த அளவிலான கரு முட்டைகளும் உற்பத்தியாகின.

அதன் மூலம் குறைந்த அளவிலேயே அவை குட்டிகளை ஈன்றன. அதே நேரத்தில் பிறந்த ஆண் எலிகளின் விந்தணுவில் குறைந்த அளவிலான ‘செல்’கள் இருந்தன. இதனால் சரிவர இனப்பெருக்கம் நடைபெறவில்லை.

பொதுவாக எலிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான இனப் பெருக்க உறுப்புகளும், முறைகளும் ஒரே மாதிரி தான் உள்ளது. இதனால் கர்ப்ப காலத்தின் போது பெண்கள் பாரசிடமால் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது நல்லதல்ல என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.