Header Ads



பிக்­குகள் மிக மோச­மாக நடந்து கொள்­கி­றார்கள், ஞான­சாரரின் கைதினால் அதிகம் கவ­லைப்­ப­டு­கிறேன்

-Fareel-

எமது நாட்டின் பௌத்த பிக்­குகள் மிகவும் மோச­மாக நடந்து கொள்­கி­றார்கள். இதனை முழு உல­கமும் பார்த்துக் கொண்­டி­ருக்­கி­றது. இன்று காவி­யு­டைக்கு கௌரவம் இல்­லாமற் போய்­விட்­டது. ஞான­சார தேரரும், அவரைச் சேர்ந்­த­வர்­களும் நாட்டின் சட்­டத்தை மதிக்க வேண்டும் என ஜாதிக பல சேனாவின் தலைவர் வட்­ட­ரக்க விஜித தேரர் தெரி­வித்தார்.

ஞான­சார தேரர் என்னை எதி­ரி­யாகக் கரு­தி­னாலும் அவரின் கைதினால் அதிகம் கவ­லைப்­ப­டு­பவன் நானே. ஞான­சார தேர­ருக்கு மாத்­தி­ர­மல்ல நாட்டின் எந்­தவோர் பிர­ஜைக்கும் துன்பம் ஏற்­ப­டக்­கூ­டாது என்றும் அவர் கூறினார்.

பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், "ஞான­சார தேரர் நீதி­மன்­றுக்குள் நடந்து கொண்­டுள்ள முறை முற்­றிலும் தவ­றா­ன­தாகும். நீதித்­து­றை­யையும், நீதி­ப­தி­க­ளையும் அவ­ம­தித்துப் பேசி­யி­ருக்­கிறார்.

நீதி­ப­தியின் கட­மை­க­ளுக்கு இடை­யூறு விளை­வித்­தி­ருக்­கிறார்.

பிரகீத் எக்­னெ­லி­கொ­டவின் மனைவி சந்­தி­யா­வுக்கு அவ­ரது கண­வ­ருக்கும் என்ன நடந்­தது என்­பது பற்றி அறிந்து கொள்­வ­தற்கு உரிமை இருக்­கி­றது.

அவரும் இந்­நாட்டுப் பிர­சையே அவரும் அவ­ரது பிள்­ளை­களும் பிரகீத் எக்­னெ­லி­கொ­டவின் மறை­வினால் துன்­பத்தில் ஆழ்ந்­தி­ருக்­கி­றார்கள். அவர் உயி­ருடன் இருக்­கி­றாரா? அல்­லது கொலை செய்­யப்­பட்டு விட்­டாரா? என்­பதை சட்­டமே வெளிப்­ப­டுத்த வேண்டும்.

பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேர­ரினால் கடந்த காலங்­களில் நானே மிகவும் பாதிக்­கப்­பட்­டவன். பொது­ப­ல­சேனா அமைப்­பினர் என்­னைத்­தாக்கி வெட்டுக் காயங்­க­ளுக்­குள்­ளாக்­கி­னார்கள்.

பொலிஸார் என்­மீது முறைப்­பாடு செய்து நான் 14 நாட்கள் களுத்­துறை சிறையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டேன்.

ஞான­சார தேரர் பல தட­வைகள் என்னை அச்­சு­றுத்­தினார். என்­றாலும் அவ­ரது கைதினால் நான் மிகவும் கவ­லை­ய­டைந்­துள்ளேன்.

நாம் பௌத்த தேரர்­க­ளாக இருக்­கலாம். சாதா­ரண பிர­சை­யாக இருக்­கலாம். ஆனால் சட்டம் அனை­வ­ருக்கும் சம­மா­னதே. அதை மதிக்க வேண்டும்.

நாட்டின் சட்­டங்­களை மதிக்­கும்­படி பௌத்த பெருமான் புத்­தரும் கூறி­யுள்ளார். கோட்டை நீதி­மன்றில் விசா­ர­ணையின் கீழ் இருக்கும் எனது வழக்கில் பிர­தி­வா­தி­யான ஞான­சா­ர­தேரர் என் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி மைத்­திரி குண­ரத்­னவை ‘நாய்’ என்­றெல்லாம் அவ­தூ­றாக ஏசி­யுள்ளார்.

பௌத்த குரு­மார்கள் ஒழுக்­க­முள்­ள­வர்­க­ளாக சமு­தா­யத்தில் வாழ்­வ­தற்கு மகா­நா­யக்க தேரர்கள் விழிப்­பூட்ட வேண்டும்.

பிக்­கு­களின் இவ்­வா­றான செயற்­பா­டுகள் குறித்து நாட்டு மக்­களே விசனம் தெரி­விக்­கி­றார்கள். சந்­தியா எக்­னெ­லி­கொட கண­வனை இழந்து எவ்­வ­ளவு வேத­னைக்­குள்­ளா­கி­யுள்ளார் என்­பதை நாம் நினைத்­துப்­பார்க்க வேண்டும்.

நாட்டில் காணாமற் போனவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்ட, தேடிப்பார்க்க சட்டத்தில் இடமிருக்கிறது. நீதித்துறையின் நடவடிக்கைக்கு எவராலும் இடையூறு விளைவிக்க முடியாது.

ஞானசார தேரர் நீதியை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

1 comment:

  1. உண்மையான மத குருவாக இருந்தால் சட்டத்தை மதித்து நடப்பார்கள் ஆனால் இவன் தேரர் என்ற பேரில் அடாவடித்தனம் செய்கின்றான் உண்மையான போலிஸ் காக்கி உடை அணிவது சகஜம் ஆனால் நடிப்புக்காக காக்கி உடை அணிபவன் உண்மையான பொலிசாக முடியுமா?அதே போன்றுதான் இவன் செய்தி மதகுருவின் வேலை மக்களை நல்வழிப்படுத்தும் உபதேசம் புரிவது மனிதர்களின் மனங்கள் சந்தொசப்படும்படி வாழ்வை அமைத்துக்கொள்வது இன மத பேதம் இல்லாமல் நடப்பது .இதில் இவனிடம் எதுவுமே இல்லை அப்போ இவன் யாரு மஞ்சள் புடவை அணிந்த பயங்கரவாதி இதை உண்மையான் பிக்குகள் இனம்காண வேண்டும் உடையால் யாரும் சிறந்தவனாக முடியாது உள்ளத்தால் மட்டுமே மனிதன் சிறந்தவனாக முடியும்

    ReplyDelete

Powered by Blogger.