Header Ads



மாடுகள் அறுப்பது, முழுமையாக தடை செய்யப்படும் - ஜனாதிபதி மைத்திரி

இறைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதை முழுமையாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மாட்டிறைச்சி தேவைப்படுவோரு க்காக வெளிநாடுகளிலிருந்து அதனை இறக்குமதி செய்ய முடியும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாட்டுப் பொங்கல் பண்டிகையில் முக்கியத்துவம் பெறும் ஒரு விலங்கு என்பதுடன் மத ரீதியிலும் மக்கள் வாழ்விலும் பெரும் மதிப்பைப் பெறும் விலங்குமாகும். அதனை இறைச்சிக்காக கொன்று பயன்படுத்துவது ஏற்க முடியாதது.

நான் ஒரு பௌத்தன் என்ற வகையிலும் எந்த மாமிசமும் உண்ணாதவன் என்ற வகையிலும் இலங்கையில் மட்டுமன்றி உலகில் வேறு எந்த நாட்டிலும் மாடுகள் இறைச்சிக்காக கொல்லப்படுவதை விரும்பமாட்டேன்.

எனினும் மாட்டிறைச்சி உணவுக்காக தேவைப்படுவோருக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது தொடர்பில் உத்தேசித்துள்ளோம்.

அதேபோன்று மாடுகள் ஏற்றிச் செல்லும் போக்குவரத்துக்கான சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் நிதியமைச்சர் மற்றும் வர்த்தக அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்று களுத்துறை பயாகலை இந்து வித்தியாலயத்தில் இடம்பெற்ற அனைத்து இன, மத மக்களும், மாணவர்களும், மதத் தலைவர்களும் கலந்து கொண்ட ஒருமைப்பாட்டு பொங்கல் விழாவில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 



19 comments:

  1. Very good.Pls do it quickly

    ReplyDelete
  2. மற்ற மதங்களுக்கு மதிப்பு கொடுப்பவர்களாக நாங்கள் முஸ்லீம்களும் இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து, மாடு என்பது எங்கள் நாட்டில் வாழுகின்ற ஏனைய மதத்தவர்களின் மரியாதைக்குரிய விலங்கு என்பதால் நங்கள் இந்த நாட்டில் அதை அறுத்து சாப்பிடாமல் இருப்பது நல்லது. அவ்வாறு செய்வோமானால் அவர்களது மதத்தை நங்கள் மதிப்பவர்களாக இருப்போம். இதன் மூலம் இங்கு இருக்கின்ற இனவாதிகளுக்கும் நங்கள் முஸ்லிம்கள் விட்டுகொடுப்பவர்கள் என்பதை புரியவைக்க முடயும். இதற்க்கு பதிலாக இறக்குமதி செய்து சாப்பிதுவதில் என்த தவறும் இல்லை.

    ReplyDelete
  3. உழ்ஹியா கொடுப்பதற்கு மாடுகள் தடை செய்யப்பட்டால் அதற்கு மாற்றீடாக ஆடுகள் அல்லது ஒட்டகங்கள் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .இவ்வாறு செய்யலாமா என்பது பற்றி உலமாக்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் .

    ReplyDelete
  4. ulhiya koduppazatku welinaadukku powoma
    my3 sir?

    ReplyDelete
  5. இவரின் கருத்துப்படி பார்த்தாலே எந்த உயிரும் அறுப்பது கூடாது பச்ச தண்ணீரை கூட குடிக்க முடியாது எல்லாவற்றிலும் உயிர் உண்டு மாட்டை மட்டுமா இறைவன் உயிர் உள்ளதாக படைத்தான்?

    ReplyDelete
  6. hooohooo.. so then expect for cow disease shortly and all will start to die... also farmers ?? who r u to prohibit, this is permitted by the creator for mankind to eat. Any where in the world prohibited since world created ? Any one touch like this thinks so expect ur ? ?.....Inshallah..

    ReplyDelete
  7. Dear Muslim political leader, please note that Hon My3 saying he can not admit sloughteing of cow any where in the world, but he is going to import beaf from abroad!!! where is abroad? is it out of the world? cow is cow wherever it is being sloyghter.

    ReplyDelete
  8. Looks funny, "slaughtering Cows in Sri-Lanaka is sinful if it is slaughtered in any other country can consume" is this you really mean Mr. President?

    ReplyDelete
  9. ஐ நா வில் பேசினால் உலகம் முழுவதும் மாடறுப்பை நிறுத்தி விடலாமே

    ReplyDelete
  10. இந்த மாமிசம் உன்னா சட்டம் சிலரது குடும்பத்துக்குல் இருந்து சின்னசின்னதாக உருவெடுத்ததாகத்தான் இருக்கவேன்டும் காரனம் நவீன உலகில் நவீன உனவுவகைகலை விரும்பியுன்னும் இன்ரைய தலமுரைனருக்கு மதத்தின் பெயரால் இவைகள் மருக்கப்படுவதும் தான்டியும் உன்டால் தெய்வகுற்றமாகிவிடும் அல்லது மதத்தால் ஒதுக்கபட்டுவிடுவோமோ எனும் பயத்தினையும் கொன்ட எத்தனையோ குடும்பங்கள் இன்ரைய காலகட்டத்தில் இருக்கதான் செய்கின்ரார்கள் இவைகலை மதபோதகர்கள் சேர்ந்து சட்டமாக்க முயட்சிசெய்கின்ரார்கள் இதுவும் ஒட்டுமொத்த சமூகத்தின் ஒரு அடக்குமுரையாகத்தான் பார்க்க தோனுகின்ரது ஆனால் இதற்கு ஜனாதிபதி சொல்லும் சொலுசன் ஏற்ருக்கொல்லமுடியாதது ஒருவேலை மக்கள் கருத்தரிய மரைமுகமாக பேசியிருக்கலாம் எதற்கும் பொருத்திருந்துதான் பார்க்கவேன்டும்

    ReplyDelete
  11. UN il solli nirutthinaal...ellorum maatulaye lesaaga payanam pohalam.......hihihihihi

    ReplyDelete
  12. இந்தியாவில்தான் இந்த வகையான மூட நம்பிக்கை அதிகமாக இருந்தது இப்போது இலங்கையிலும் பரவி விட்டது.அதனால் இந்தியா வல்லரசு ஆனவுடன் இலங்கையும் வல்லரசாக ஆகிவிடும்.சந்தோசம்.முட்டாளுக்கு கிட்டப்பாதையாம்.படித்தவனுக்கு பாலத்தால் போக முடியாதாம்.பழமொழி

    ReplyDelete
  13. Madu.aruppathai.niruththinal.athikam.nanmai(palan)adaipavarkal.muslimkal.en.ennaventral.maddu.erachil.athikam.noikal.undu.athai.unarnthu.seyal.padunkal

    ReplyDelete
  14. Madu aruppazai evvalavu kalaththitku thadai seiya mudium? Insha allah madu aruppazai thadai senja 1yearla my3 janadhipathy avarhale maduhalai arukkum padi uththaravu viduvar. Ean endral manidharhalin inapperukkaththai vida maduhalin inapperukkam vehamaha irukkum poruthirundhu parpome.

    ReplyDelete
  15. Jaf.Mus. plz. note that some comments are not completely visible...

    ReplyDelete
  16. Madu.aruppathai.niruththinal.muthalil.nanmai.adaivathu.muslim.ennaventral.beaf.sappiduvathal.noikal.athikam.varukinrathu

    ReplyDelete
  17. Madu.aruppathai.niruththinal.muthalil.nanmai.adaivathu.muslim.ennaventral.beaf.sappiduvathal.noikal.athikam.varukinrathu

    ReplyDelete
  18. Maithri has no prudent policy. He is ignorant about what's going around not suitable to be a president.

    ReplyDelete

Powered by Blogger.