ஈரானுடனான தொடர்புகளை அறுத்து எறியுங்கள் - அரபு நாடுகளுக்கு அறைகூவல்
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை ஈரான், ரஷியா ஆகிய நாடுகள் வெளிப்படையாக ஆதரித்து வருகின்றன. இதனால், அந்நாட்டின் எதிர்க்கட்சியாக நாடு கடந்து துருக்கியில் இருந்து செயல்பட்டுவரும் சிரியா தேசிய கூட்டணி கட்சி ஈரானின் எதிரி நாடான சவுதி அரேபியாவை ஆதரித்து வருகின்றது.
சமீபத்தில் ஷியா பிரிவு தலைவர் நிம்ர் அல் நிம்ர் உட்பட 47 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சவுதி அரேபியா அரசின் நடவடிக்கைக்கு ஈரான் அதிபர் ஹஸன் ரவுஹானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சவுதி அரசு தன்னுடைய பெயரினை உலக நாடுகளில் மட்டுமல்லாமல் இஸ்லாமிய நாடுகள் மத்தியிலும் கெடுத்து கொண்டது என்றும் ஈரான் அதிபர் விமர்சித்துள்ளார்.
இதையடுத்து, வர்த்தகம், போக்குவரத்து உள்பட ஈரானுடனான அனைத்துவகை தொடர்புகளையும் துண்டித்து கொண்டதாக சவுதி அரேபியா அறிவித்தது.
சன்னி பிரிவை சேர்ந்த மன்னர் சல்மானின்கீழ் நடந்துவரும் ஆட்சி மண்ணோடு மண்ணாகிப் போகும் என ஈரானில் உள்ள ஷியா தலைவர்கள் சபித்துவரும் நிலையில், ஈரான் நாட்டுடனான தொடர்புகளை அறுத்து எறியுங்கள் என சிரியாவின் முக்கிய எதிர்க்கட்சியான சிரியா தேசிய கூட்டணி கட்சி அரபு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்காவின் தற்போதைய திட்டம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் .அதாவது ஒரே நேரத்தில் சவுதியும் ஈரானும் தாக்கப்படலாம் .
ReplyDeleteSiyaakkal muslimgal alla enbadai marakka vendaam
ReplyDelete