கல்முனை மாநகர சபையில், இப்படியும் கொடுமை
(முபாரக்)
கல்முனை மாநகர சபையின் நிதி முகாமைத்துவப்பிரில் ஒரு A4 சைஸ் பேப்பர் 100 ரூபா கொடுத்து வாங்கும் கொடுமை.
கல்முனை மாநகர சபையில் சோலைவரி செலுத்தவரும் பொதுமக்களிடம் A4 சைஸ் பேப்பர் ஒன்றில் உள்ள விண்ணப்ப படிவத்தை பிரதி எடுத்து அதனை 100 ரூபா செலுத்தி பெற்று கொள்ளுமாறும் அதனை நிறப்பி தந்தால் மாத்திரமே சோலைவரி செலுத்த முடியும் எனவும், செலுத்தப்படும் பணத்துக்கு (A.P.D form) என பணம் பெற்றுக்கொண்ட ரசீதும் வழங்கப்படுகிறது. (ரசீது இணைப்பு).
A4 சைஸ் பேப்பர் ஒன்றில் உள்ள விண்ணப்ப படிவத்தை பிரதி எடுத்து அதனை 100 ரூபாவுக்கு விற்றுதான் கல்முனை மாநகர சபையினை நடத்தும் அளவுக்கு இம்மாநகர சபை சென்றுவிட்டதா என பொது மக்கள் கேள்ளி கேட்கின்றனர்.
இப்படியான கொடுமை எந்த மாநகரசபையிலும் நடக்காத புதுமையான கொடுமையாகவிருப்பதாக பொது மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
Post a Comment