Header Ads



IS பயங்கரவாதிகள் இலங்கையில் செயற்பட, எந்த அவகாசமும் இல்லை - அமைச்சர் ஹலீம்

இலங்கையிலுள்ள எந்தவொரு முஸ்லிம் பிரஜையும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்தவர்கள் அல்லர் என தபால், தபால் சேவை மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

அரசியல் இலாபம் பெறும் நோக்கில் சிலர் வெளியிடும் அறிவிப்புக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட இலங்கையர்கள் குறித்து கடந்த காலங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டன. இருப்பினும், அந்த அமைப்பிற்கு இலங்கைக்குள் செயற்படுவதற்கு எந்த அவகாசமும் இல்லையெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments

Powered by Blogger.