Header Ads



பாராளுமன்ற உறுப்பினராக, தௌபீக் நியமனம்

அண்மையில் பதவியை இராஜினாமா செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸின் இடத்திற்கு எம்.ஷரீப் தௌபீக் (M.Sharif Thowfeek) தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 19ம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் இந்த முடிவை எடுத்ததாக பின்னர் அறித்தமை குறிப்பிடத்தக்கது.

சில மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் இல்லாமையால், அந்தப் பகுதிகளிலுள்ளவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கும் பொருட்டே தான் சொந்த விருப்பத்தின் பேரில் இராஜினாமா செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

2 comments:

  1. குஆனையும் ஹதீசையும் மையமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி அநியாயத்தின் உச்சகட்டத்தில் உள்ளது.மரப்பானை ஒரு தரம்தான் வேகும்.

    ReplyDelete
  2. அப்படியா சரி சார்.
    போய் வேலையை பாருங்க ரிசாட்க்கு சொரிஞ்சுடுங்க.
    நம்ம P கழுவ ஆளில்லை நாற்றம் தாங்கல அத விட்டுட்டு, ஊரான் அழுக்க ஊர் கூட்டி காட்டி ஒப்பாரி வைங்க

    ReplyDelete

Powered by Blogger.