பொலிஸ் டயரியில் மகிந்த ராஜபக்ஸ, விசாரணை ஆரம்பம்
பொலிஸ் பரிசோதகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான நாட்குறிப்பில் (Diary) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பின்னனி புகைப்படத்துடன் கூடிய பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோனின் பழைய புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பொலிஸ் பரிசோதகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள நாட்குறிப்பை அச்சிடும்போது பொலிஸ்மா அதிபரின் புகைப்படம் தாமதமாகின்ற காரணத்தால் பழைய புகைப்படமொன்றை அச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறித்த நாட்குறிப்பு அச்சிடப்பட்ட பின்னர் பொலிஸ்மா அதிபர் அமர்ந்திருக்கும் ஆசனத்துக்கு பின்னால் முன்னாள் ஜனாதிபதியின் புகைப்படம் காணப்படுவதால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
நாம் விரும்பியோ விரும்பாமலோ மஹிந்த ஆட்சி ஒரு பக்கம் நாட்டில் நடக்கிறது
ReplyDelete