Header Ads



"றிசாத் பதியுதீன் பிரச்சினையில்லை, அவர் சிறுபான்மையின அமைச்சர் என்பதுதான் பிரச்சினை" - ராஜித சேனாரத்ன

* ஞாயிறு லங்காதீப பத்திரிகையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன வழங்கிய நேர்காணல், 

“அமைச்சர் ரிஷாத் பதீயுதீன் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பிரச்சினை என்ன?” 

 “நானும் முன்னாள் காணி அமைச்சராக இருந்தேன். அதனால் எனக்கு வில்பத்து விவகாரம் தொடர்பில் நன்றாக தெரியும். எந்தவொரு நிலப்பகுதியையும் சரணாலயத்திற்கு பெற்றுக்கொள்ள அமைச்சர் ஒருவருக்கு அதிகாரமுள்ளது.

அதுபோன்று அரசுக்குச் சொந்தமான வனப்பகுதியிலிருந்து குறிப்பிட்ட நிலத்தை விடுவித்துக்கொள்ளவும் முடியும். நான் காணி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் சிங்க ராஜ வன எல்லையை 5ஓட் முன்னுக்கு கொண்டு வந்தேன். ஒரு பகுதியை சிங்க ராஜவனத்துடன் இணைத்தேன். அதுபோன்று நுவரெலியாவில், சரணாலய வனத்திலிருந்து 200 ட் நிலத்தை விடுவித்து மக்களுக்கு வீடு கட்டிக்கொள்ள இடமளித்தேன். இதுபோன்ற விடயங்களைச் செய்ய முடியும். அமைச்சர் ரிஷாத் இங்கு பிரச்சினையொன்றில்லை என்பதாக சுட்டிக்காட்டுகின்றார். அவர் ஒரு சிறுபான்மையின அமைச்சர் என்பதுதான் இங்கு பிரச்சினை.”

No comments

Powered by Blogger.