டொனால்ட் ட்ரம்பின் மண்டையில் இது புரியமா..?
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் தொழுகைக்காக தேவாலயம் சென்றபோது அங்குள்ள மதகுரு ஒருவர் ’அகதிகளை எவ்வாறு அரவணைக்க வேண்டும்’ என அவருக்கு பாடம் கற்பித்துள்ளார்.
அயோவா மாகாணத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ளது.
இந்த மாகாணத்தில் மத நம்பிக்கை கொண்ட வாக்களர்கள் அதிகம் என்பதால், வேட்பாளராக தெரிவாவதற்கு அவர்களது ஆதரவு மிகவும் அவசியமானது ஆகும்.
இந்நிலையில், அங்குள்ள Muscatine நகரில் அமைந்துள்ள First Presbyterian தேவாலயத்திற்கு குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் நேற்று தொழுகைக்காக சென்றுள்ளார்.
தேவாலயத்தின் மதகுருவான Rev Dr Pamela Saturnia என்பவர் தொழுகையை நட்த்தியுள்ளார். அப்போது, அவர் வழங்கிய உரையில் டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
‘தேவாலயத்தை சேர்ந்த கிறித்துவர்கள் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் நலனிற்காக தான் ஏசுநாதர் இந்த பூமியில் அவதரித்தார்.
ஏசுநாதர் நம் அனைவருக்கும் ஒரு மகத்தான செய்தியை விட்டுச்சென்றுள்ளார். இந்த உலகில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள, இனப்பாகுபாட்டால் பிரிந்துள்ள மற்றும் பிற மக்களால் மறக்கடிக்கப்பட்ட சமுதாயத்தினரை நாம் அன்புடன் அரவணைத்து செல்ல வேண்டும்’ என கூறியுள்ளார்.
மதகுருவின் இந்த செய்தியின் மூலம், சிரியா மற்றும் மெக்ஸிக்கா நாட்டு அகதிகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என மறைமுகமாக டொனால்ட் ட்ரம்பிற்கு பாடம் புகட்டியதாக கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் களமிறங்கிய நாள் முதல், அமெரிக்காவில் உள்ள சிரியா உள்ளிட்ட இஸ்லாமிய அகதிகளுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேவாலயத்தில் தொழுகை முடிந்ததும், ‘மதகுரு என்னை நோக்கி தான் அந்த அறிவுரையை கூறினாரா என்பது எனக்கு உறுதியாக தெரியாது’ என டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
Post a Comment