ஆட்கடத்தலுடன் தொடர்பு - ஹிருணிக்கா மீது நடவடிக்கை..?
தெமட்டகொட பிரதேசத்தில் அண்மையில் கடத்தப்பட்ட நபர், கொலன்னாவயில் அமைந்துள்ள ஹிருனிகாவின் காரியாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டமை நிரூபணமாகியுள்ளது.
கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் மகள் ஒருவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட நபர் ஹிருனிகாவிடம் அழைத்துச் செல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர், நேற்றைய தினம் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
கடத்தல் குறித்த விசாரணை அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி சில ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஹிருனிகாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
தாயுடன் தொடர்பு பேணிய நபரை தாமே அடையாளம் காட்டியதாகவும், அடையாளம் காட்டப்பட்ட நபர் ஹிருனிகா மேடமிடம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சிறுமி காவல்துறையினரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் மீளவும் ஹிருனிகாவிடம் விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் மத்தியில் சிலகாலம் நல்லபெயருடன் வறவேற்கப்பட்ட ஹிருனிக்கா ஒரு சிரியபிறட்சனைக்கு பெரிதாகமுகம் கொடுத்து யானைதன் தலையில் தானே மன்போட்டகதையாக மாரிவிட்டது
ReplyDeleteஇந்த வேலையைப் பார்ப்பதற்கு பொலிஸ் நிருவாகம் இருக்கின்றது ஹிருணிக்காவுக்கு மக்கள் வாக்களித்தது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்காக அல்ல மக்களுக்கு தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே! யாராக இருந்தாலும் சட்டம் தனது கடைமையச் செய்ய வேண்டும்.
ReplyDelete