Header Ads



“எனது உடலில் ஓடுவது மனித இரத்தம்” என உரத்துச் சொல்வோம்...!

-ஜெம்ஸித் அஸீஸ்-

“சிங்ஹ லே என்றால் சிங்கத்தின் இரத்தம். அப்படியென்றால் இவர்களது செயற்பாடு சிங்கத்தைப் போன்று வீரம்மிக்கதாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் எலி, நரிகளைப் போன்று இரவு நேரங்களில் கள்ளத்தனமாக செயற்படுகின்றனர். இது சிங்கள இனத்துக்கே அவமானமாகும்” என்கிறார் நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன.

“மனிதனாப் பிறந்த ஒவ்வொருத்தரின் உடம்பிலும் ஓடும் இரத்தம் ஒரே இரத்தமே. அதன் நிறமும் சிவப்பு. இது தவிர இந்நாட்டில் வேறு இரத்தம் உள்ளவர்கள் உடனடியாக என்னை சந்திக்கவும்” என்கிறார் ரன்முத்துகல தேரர்.


ஆம், மனித உடலெங்கும் ஓடுகிறது இரத்தம்.

அது மனித இரத்தம். அதன் நிறம் சிவப்பு.

மிருகங்களின் இரத்தமும் சிவப்புத்தான்.

சிவப்பாக இருப்பதால் அது மனித இரத்தத்தின் அந்தஸ்த்தை அடைந்து விட முடியாது.


ஏனெனில், மனிதன் பகுத்தறிவைப் பெற்றவன்.

இறைவனால் கண்ணியப்படுத்தப்பட்டவன் மனிதன்.

நன்மை- தீமையைப் பிரித்தறியும் ஆற்றல் பெற்றவன்.

மனித இரத்தத்தில் மனித நேயம் இரண்டறக் கலந்திருக்கிறது.

இதனால் மனித இரத்தம் மதிப்புக்குரியது.


இரத்தத்தில் இனம், மதம், மொழி…
வேறுபாடுகள் கிடையாது.


மனித இரத்தம் கொண்டவர்களுக்கு

மனிதனை மதிக்கத் தெரியும்.

தெரிந்திருக்க வேண்டும்.
அப்போதுதான் அது மனித இரத்தம்.


மனிதர்களின் வாரிசுகளிடத்தில்
மனித இரத்தமே ஓட வேண்டும்.
மிருக இரத்தமல்ல.


நண்பர்களே!

“எனது உடலில் ஓடுவது மனித இரத்தம்”
என்று உரத்துச் சொல்லுங்கள்.
அதில்தான் பெருமை இருக்கிறது.
கண்ணியம் இருக்கிறது.


இலங்கை எனது தாய்நாடு.
எனது உடலில் ஓடுகிறது மனித இரத்தம்.
மனிதநேயம் என் இரத்தத்தில் ஊறியிருக்கிறது.
நாம் எல்லோரும் இறைவனின் குடும்பத்தினர்
என்பதுதான் இஸ்லாத்தின் பார்வை.


எனவே, “எனது உடலில் ஓடுவது மனித இரத்தம்”
என்று சொல்வதில் நான் பெருமைப்படுகின்றேன்.

1 comment:

  1. சிங்கம் வீரம் என்று யார் சொண்னத்து மணிதனிண் தந்திர பொறில் ஏன் மாட்டுகிரது மக்கு சிங்கம் அன்பு இரகம் பலம் கலந்த மணிதன் அறவும் சேர்ந்தால் வீரம்

    ReplyDelete

Powered by Blogger.