கட்டார் வாழ் கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல்
கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியில் மௌலவி பட்டம் பெற்று கட்டாரில் தற்பொழுது பணிபுரிகின்ற ஹுமாத்களுக்கிடையில் உறவை பலப்படுத்தும் நோக்கிலும் கல்லூரியின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யும் நோக்கிலும் சிநேகபூர்வ ஒன்றுகூடல் வெள்ளிக்கிழமை 08-01-2016 ஜும்மா தொழுகையின் பின் கட்டார் போக்குவரத்து அமைச்சின் திடலில் நடைபெற்றது.
இவ் ஒன்றுகூடலில் கல்லூரியின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் கல்வி மேம்பாடு சம்மந்தமாகவும் பேசப்பட்டது. கட்டார் வாழ் ஹுமாத்களின் வேண்டுகோளுக்கிணங்க நிருவாகத் தெரிவு நடைபெற்றது. இதன் அடிப்படையில் அமைப்பின் தலைவராக சம்மாந்துறையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் மௌலவி ளு.வு.ஆ.ஐ. புஹாரி (ஹாமி) அவர்களும் செயளாலராக நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் மௌலவி யு.யு.ஆ.பர்ஸாத் (ஹாமி) அவர்களும் பொருளாலராக மத்திய முகாமைச் சேர்ந்த அஷ்ஷெய்க் மௌலவி ரு.டு.ஜனுபர் (ஹாமி) அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் இவ்வமைப்பின் உபதலைவராக அஷ்ஷெய்க் மௌலவி யு.டு.ஆ.அஸ்ஹர் ஹாமியும் உபசெயளாலராக அஷ்ஷெய்க் மௌலவி றிஸ்படீன் ஹாமியும் உபபொருளாலராக டீ.ஆ.அஸ்பர் ஹாமியும் மற்றும் இவ்வமைப்பின் அமைப்பாளராக நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் மௌலவி ஐ.ஆ.முன்தஹார் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன் அடிப்படையில் ஹுமாத்களின் இரண்டாம் கட்ட ஒன்றுகூடல் வருகின்ற பெப்ரவரி முதலாம் வாரத்தில் நடைபெறும் என தீர்மாணம் எடுக்கப்பட்டது.
Post a Comment