நவமணி நிர்வாக முகாமையாளர் பெயரில், வெளியிடப்பட்டது போலி அறிக்கையே
"ஷியாக்களுக்கோ அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கோ ஆதரவாக நவமணி செய்திகளை பிரசுரிப்பது அதன் ஊடக சுதந்திரம்" என்ற தலைப்பில், நவமணி நிர்வாக முகாமையாளர் கூறப்பட்டதாக இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை போலியானது என்பதை அறியத்தருகிறேன்.
இந்த அனாமதேய அறிக்கை நவமணி பத்திரிகையின் அலுவலக மின்னஞ்சலில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. நவமணி நிர்வாகத்துக்கு தெரியாமல், அதன் வளர்ச்சிமீது காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒருவர் இந்த நாசகார வேலையை செய்துள்ளார். இதுகுறித்து நவமணி நிர்வாகம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
குறித்த மின்னஞ்சல் நேற்றிரவு 10.59 மணிக்கு அனுப்பப்பட்டு, பின்னர் அழிக்கப்பட்டுள்ளது. இரவுநேரங்களில் நவமணி அலுவலகம் திறந்திருப்பதில்லை. நமணிக்கு எதிராக நாசகார வேலையை செய்யவிரும்பிய நபர் இதனை சாதகமாக பயன்படுத்தி, குறித்த அறிக்கையை சில இணையத்தளங்களுக்கு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து பலர் நவமணி அலுவலகத்துடன் தொடர்புகொண்டு விளக்கம் கோரியிருந்தனர். உண்மையில் நவமணியின் நிர்வாக பணிப்பாளராக கடமையாற்றும் எனக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ முடியாது. இவ்வாறான நிலையால் நான் இப்படியானதொரு அறிக்கையை வெளியிடுவதற்கு எவ்வித வாய்ப்புகளும் இல்லை.
குறித்த அறிக்கையில் எனது தனிப்பட்ட வதிவிட முகவரியும் கையடக்கத் தொலைபேசி இலக்கமும் குறிப்பிடப்பட்டுள்ளது. நவமணி சார்பாக அறிக்கை வெளியிடும் யாரும் வதிவிட முகவரியை வெளியிடுவதில்லை. நவமணி பத்திரிகையின் வளர்ச்சிக்கு தீவிரமாக பங்காற்றிவரும் நான், அதன் விற்பனையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் இவ்வாறானதொரு அறிக்கையை வெளியிடுவதற்கு எவ்வித தேவையுமில்லை. இது திட்டமிடப்பட்ட ஒரு சதிமுயற்சி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நவமணிக்கு எதிராக அண்மைக்காலங்களில் பல அசம்பாவிதங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையிலே, அதன் வளர்ச்சியை தடுப்பதற்கு நாசகார சக்தி மேற்கொண்ட இந்த முயற்சி குறித்து நவமணி நிர்வாகம் தீவிரமாக விசாரணைளை மேற்கொண்டு வருகிறது. எதிர்காலங்களில் இவ்வாறான செயல்கள் நடைபெறமால் அவதானத்துடன் இருப்போம்.
நவமணி பத்திரிகை சில தனவந்தர்களின் கூட்டு முயற்சியில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையின் கீழ் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு குரல்கொடுக்கும் பத்திரிகையாக இயங்கி வருகிறது.
நவமணி பத்திரிகை ஷியாக்களுக்கோ அல்லது அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கோ ஆதரவானது அல்ல என்பதை நவமணி நிர்வாகம் வலியுறுத்திக் கூறுகின்றது. அத்துடன் இந்த செய்திதொடர்பில் பாதிக்கப்பட்ட மற்றும் மனவேதனையடைந்த அனைவருக்கும் நவமணி சார்பாக எனது வருத்தத்தை தெரிவிக்கின்றேன்.
ப்ரீலங்கா மீடியா லிமிட்டெட் (நமவணி)
முகாமைத்துவ பணிப்பாளர்
எம்.டி.எம். றிஸ்வி

Post a Comment