Header Ads



பாடசாலை - பள்ளிவாசல் உள்ள பகுதியில் தொடர்பு கோபுரம், போராட்டத்தில் குதித்த மக்கள்

-TM-

அம்பாறை, அக்கரைப்பற்று முதலாம் பிரிவின் டீன்ஸ் வீதியிலுள்ள காணியொன்றில் தனியார் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு அங்கு சென்ற அதிகாரிகளுக்கும் அப்பிரதேச மக்களுக்குமிடையில் இன்று புதன்கிழமை (27) முறுகல் ஏற்பட்டமையால் பதற்றமான நிலையேற்பட்டது.

இது பற்றி தொலைத்தொடர்பு கோபுர அமைப்பு வேலை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில்,

இப்பிரதேச்தில் தொலைத்தொடர்புக்கோபுரம் அமைப்பதற்கு முறையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம். இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இப்பிரதேச மக்கள் அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர்.

இதனால் எமது கோபுரத்துக்கான நிர்மானப்பணியில் தடைகள் ஏற்பட்டு, காலம் சென்று கொண்டுள்ளதனால் பொலிஸ் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றின் அனுமதியைப் பெற்று வேலையைத் தொடங்கியுள்ளோம்.

எனவே, அதிகாரிகள் மற்றும் கோபுரம் அமைப்பதற்கான பணியாளர்களிடம் வீண் சண்டையில் இடுபடாது சட்டம், நீதியை கடைப்பிடிக்குமாறு கேட்கின்றோம் என்றார்.

இதNவைளை, இக்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில்,

அக்கரைப்பற்று மக்கள் குடியிருக்கும் பிரதேசத்தில் தனியார் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எடுத்து வரும் நடவடிக்கையைக் கண்டித்து வருகின்றோம்.

அக்கரைப்பற்று முதலாம் பிரிவின் டீன்ஸ் வீதியிலுள்ள தனியார் காணியிலேயே இத்தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

அமைக்கப்படவுள்ள இத்தொலைத்தொடர்பு கோபுரத்துக்கு  அருகாமையில் மக்கள் செறிந்து வாழ்ந்து வருவது மட்டுமல்லாது அங்கு அரசாங்க பாடசாலை, குர்ஆன் மத்ரிஸா மற்றும் பள்ளிவாசல் என பல நிறுவனங்களும் அமைந்திருக்கின்றன.

தொலைத்தொடர்பு கோபுரம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் அமைக்கப்படுவதனால் பாதகமான கதிர்வீச்சுத் தாக்கம், இரைச்சல் மற்றும் சுகாதார சீர்கேடுகளுக்கு ஆளாக வேண்டிய ஏற்படும் என்றனர்.

No comments

Powered by Blogger.