Header Ads



உலகின் மிகப்பெரிய நீல இரத்தினக்கல், இலங்கையிலிருந்து எடுத்துச்செல்ல தடை


உலகிலே  பெறுமதி வாய்ந்த நீலக்கல்லை நாட்டில் இருந்து வெளியில் கொண்டு செல்வதை தடுப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சுங்க திணைக்களத்தினரையும் அறிவுறுத்தியுள்ளதாக, அதன் தலைவர் அசங்க வெலகெதர, Hiru செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

அண்மையில் இரத்தினபுரி பகுதியில் 281 கிராம் நிறைக் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய நீலக்கல் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த நீலக்கல்லின் பெறுமதியை நிர்ணயிக்க முடியாதுள்ளதாக, அதனை ஆய்வுசெய்த கொழும்பு இரத்தினக்கல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும் அதன் உரிமையாளரான இலங்கையர், அதனை 4 ஆயிரத்து இருநூறு கோடிக்கு விலை நிர்ணயம் செய்துள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

அவர் அதற்கு "இலங்கையின் ஆதாம் நட்சத்திரம்" என பெயர் சூட்டியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நீலக்கல்லை நாட்டில் இருந்து வெளியில் கொண்டு செல்லப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக, இரத்தினக்கற்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைத் தெரிவித்துள்ளது.

3 comments:

  1. thaanum thinnamatanga mathawanukum kudukka matanga

    ReplyDelete
  2. கல்லின் பெறுமதி இப்பொழுது வீழ்ச்சி அடையும்.

    ReplyDelete
  3. The value is OVER ESTIMATED and cannot be sold as no one can take it out of Sri Lanka

    ReplyDelete

Powered by Blogger.