Header Ads



அகதிகளுக்கு புகழாரம் சூட்டும் ஜனாதிபதி - ஜேர்மன் வளமாகி, பிரகாசிக்கும் என நம்பிக்கை


ஜேர்மனியில் புகலிடம் கோர வரும் அகதிகளால் நாட்டின் எதிர்காலம் வளமாகவும் பிரகாசமாகவும் இருக்க அகதிகள் நமக்கு அளித்துள்ள ஒரு வாய்ப்பு என சான்சலர் ஏஞ்சிலா மெர்க்கல் புகழாரம் சூட்டியுள்ளார்.

புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக வியாழக்கிழமை மாலை நேரத்தில் ஜேர்மனியின் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் தனது புத்தாண்டு செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில், அகதிகள் நமது நாட்டிற்கு புகலிடம் கோர வருவதன் மூலம் நமது நாடு முன்னேறுவதற்கு அவர்கள் நமக்கு வாய்ப்பளித்துள்ளதாக அனைவரும் கருத வேண்டும் என பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், இதனை சில சமூக விரோதிகள் அகதிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

பொதுமக்களாகிய நீங்கள் அவர்களை இனங்கண்டு ஒதுக்க வேண்டும்.

2015ம் ஆண்டில் மட்டும் சுமார் 10 லட்சம் புலம்பெயர்ந்தவர்களும் அகதிகளும் ஜேர்மனிக்கு வந்துள்ளனர்.

இவர்களை அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் கடுமையாக தான் இருக்கும்.

ஆனால், இதுபோன்ற சவால்களை எதிக்கொள்ளும்போது தான் நமது நாடும் வளமாக மாறும்.

அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள பல்வேறு உலக நாடுகள் முன்னேற்றப்பாதையில் தான் செல்கின்றனவே தவிர, அவர்களுக்கு வீழ்ச்சி ஒன்றும் ஏற்படவில்லை.

அதிக அளவிலான அகதிகளை அனுமதிப்பதன் மூலம், நம் நாடு இரண்டு பகுதிகளாக பிரிந்து விடாது என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து அகதிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஏஞ்சிலா மெர்க்கல் தனது புத்தாண்டு உரையில் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.