Header Ads



புலிகளின் அச்சுறுத்தல்கள், இன்னமும் முழுமையாக ஒயவில்லை - கோதபாய எச்சரிக்கை


புலிகளின் அச்சுறுத்தல்கள் இன்னமும் முழுமையாக ஒயவில்லை என கோதபாய ராஜபக்ஸ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமது இலக்குகள் நிறைவேறும் வரையில் ஓயப் போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் உறுதியுடன் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெப்பிலியான சுனேத்திராதேவி விஹாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களின் மனோ நிலை தொடர்பில் நடத்திய சோதனையின் போது இந்த விடயங்கள் தெரியவந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது இலக்கு நிறைவேறும் வரையில் பயங்கரவாத எண்ணங்களை கைவிடப் போவதில்லை என குறித்த புலி உறுப்பினர்கள் கூறியிருந்தனர் என கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

“பிரபாகரன் இல்லாமல் போனாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியைத் தழுவினாலும், எமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் நிறைவேற்பற்றப்படும்” என புலி உறுப்பினர்கள் கூறியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களை பீதியில் ஆழ்த்தும் நோக்கில் தாம் இந்தக் கருத்தை கூறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பாரியளவில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த மொரிஸ் மற்றும் கிரி என்ற தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை தற்போதைய அரசாங்கம் விடுதலை செய்ய முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இவர்களை கைது செய்வதற்காக தமது பதவிக் காலத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியதாகத் தெரிவித்துள்ளார். இந்த சிரமங்களை புதிய  அரசாங்கம் அறிந்திருக்க வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

3 comments:

  1. அதொடு சேர்த்து சிங்கள சிங்க பயங்கரவாதம் உருவாகி இருக்கிறது

    ReplyDelete
  2. அய்யோ நாட்டின் பயங்கரவாதத்தை தோற்கடித்து துனிச்சலோடு செயல்பட்ட நீங்கள் இவ்வலவும் அவர்கள் சொல்ல கேட்டு சும்மாவா இருந்தீர்கள் பாதுகாப்பு செயலாலரின் சிருபிள்ளத்தனமான பேச்சில்லையா இது......

    ReplyDelete
  3. இந்த பாட்ட படிச்சாதான் சில்லர விலும்

    ReplyDelete

Powered by Blogger.